Thursday, 06 Aug, 12.20 pm Kalakkal Cinema

சினிமா செய்திகள்
தனது கல்யாணத்துக்கு வந்தா கண்டிப்பா கொரோனா டெஸ்ட்!! கட்டுப்பாடு விதித்த பிரபல நடிகர்!!

Raana Condition To Relatives : தெலுங்கின் பிரபல நடிகரான ராணா, ஆகஸ்ட் 8-ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ரிஷிகா பஜாஜ் என்பவரை நீண்ட நாளாக காதலித்து தற்பொழுது கரம்பிடிக்க உள்ளார்.

இவர் தமிழில் அஜித் படமான ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ராஜமௌலியின் பாகுபலி வில்லனாக இவரின் மிரட்டலான நடிப்பை திரையுலகமே வியந்து பார்த்தது.

ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழர்களை மீட்ட பிரபல பாலிவுட் நடிகர்??

டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் நடத்தலாம் என்று திட்டமிட்ட நிலையில் தற்பொழுது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இந்த மாதத்திலேயே திருமணம் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் இவருக்குச் சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவில் இந்த திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வின் அதிகமாக இருப்பதால் இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அவரது தந்தை முடிவு செய்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema
Top