Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் - நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் - நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

Kalakkal Cinema 11 hrs ago

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து 'தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

நான்கு மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளதால், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக வலுவான ஒருங்கிணைந்த அமைப்பு உருவாகியுள்ளது.

தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவை இந்த புதிய அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே இணைப்புப் பாலமாக செயல்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான தயாரிப்புப் பணிகளை சீரான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ள தேவையான ஆதரவை வழங்கவும் இந்த கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

புதிய நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னடத் துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராக செயல்படுகிறார்.

தமிழக சங்கத்தின் கெளரவத் தலைவரான ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். சத்யஜோதி டி.ஜி. தியாகராஜனும் கெளரவத் தலைவராக இடம்பெற்றுள்ளார்.

நான்கு மொழித் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளையும் ஒருங்கிணைக்கும் இந்த புதிய அமைப்பு, தயாரிப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், தயாரிப்பு தரத்தை உயர்த்தி, தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema