Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
3 நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே நடனமாடும் செடி பற்றி தெரியுமா?

3 நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே நடனமாடும் செடி பற்றி தெரியுமா?

Kalki Online 2 months ago

ஸ்ரீலங்கா உள்ளிட்ட தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் 'டான்சிங் பிளான்ட்', 'டெலெக்ராப் பிளான்ட்' அல்லது 'செமாபோர் பிளான்ட்' (Semaphore Plant) என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் தாவரம் ஒன்று வளர்ந்து வருகிறது.

கோடாரியோகாலிக்ஸ் மோட்டோரியஸ் (Codariocalyx Motorius) என்பது இதன் அறிவியல் பெயராகும். இச்செடியின் நுனிப் பகுதியில் உள்ள இலை போன்ற சிறிய குருத்துகள் அனைவரும் பார்க்கும் விதத்தில் விரைவான அசைவுகளை உண்டு பண்ணுகின்றன.

ஒவ்வொரு 3-5 நிமிட இடைவெளியில், எந்த விதமான வெளித் தூண்டுதலுமின்றி இந்த செடியில் நடனமாடும் செயல் போன்ற அசைவுகள் வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

டான்சிங் பிளான்ட் ஏன் நடனமாடுகிறது? அறிவியல் பின்னணி!

'The Dancing Plant: Codariocalyx Motorius (Houtt.) Ohashi' என்ற தலைப்பில் ரிசர்ச் கேட் (Research Gate) என்னும் ஆராய்ச்சி இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இத்தாவரம் சூரிய ஒளி அல்லது நேரடியாக அல்லாத ஒளி (indirect light) பாயும் திசையை தன் உயிரியல் சென்சார்கள் (biological sensors) மூலம் உணர்ந்து அத்திசையில் விரைவான அசைவுகளை உண்டுபண்ணி பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் இந்த செடிகளை 'பிராண ஜீவா' என அழைக்கின்றனர்.

இச்செடிகளின் அசைவுகளைப் பார்த்து ஆச்சரியப்படும் மக்களுக்கு, 'அசைவுகள் உண்டுபண்ண உதவுவது அதன் மோட்டார் செல்கள்' என்றும், 'இளம் குருத்திலைகளின் அடிப் பகுதியில் உள்ள இலை மூட்டுகளின் (Pulvinus) செல்கள் விரிந்தும் சுருங்கியும் செயல்படுகின்றன' எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அந்த இயக்கம் ஓர் அலை போன்ற உயிரியல் சுழற்சியால் நடைபெறுகிறது.

ஆண்டு முழுவதும் மல்லிகை பூக்க வேண்டுமா? இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க!

டான்சிங் பிளான்ட் மீதான மின் மற்றும் கதிர்வீச்சு பாதிப்புகள்!

குறிப்பாக அது பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற அயன்களை நகரச் செய்கின்றன' என்றும் ரிசர்ச் கேட் கட்டுரை விளக்குகிறது.

பொட்டாசியம் அயன்களின் நகர்வு, இலை மூட்டுகளில் உள்ள தண்ணீர் முழுவதையும் நகரச் செய்கிறது. அதன் விளைவாக இலை மூட்டுகளில் உள்ள நீரின் அளவு மாறுகிறது. இந்த மாற்றம் இலைத் துண்டுகள் (leaflets) சுழல உதவுகிறது.

 டான்சிங் பிளான்ட் |Dancing plant

இந்த செடிகள் வெளிப்புற மின் தூண்டுதல்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவற்றின் இயற்கையான அசைவுகள் பாதிப்படைந்து செயலற்றுப் போகின்றன.

தாள நயத்துடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் இந்தச் செடியின் இயக்கங்களுக்கு உதவும் உயிரியல் சுழற்சியானது, DC மின்சாரம், 27-MHz ரேடியோ அலைகள் மற்றும் மின்காந்த புலன்களால் பாதிப்புக்குள்ளாகின்றன.

ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி?

டான்சிங் பிளான்ட் மருத்துவ குணங்கள் என்ன?

சீனாவில் பழங்காலத்திலிருந்தே இந்தச் செடி, ருமாடிசம், இருமல், வயிற்றுப் போக்கு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற பல வகையான நோய்களை குணப்படுத்த உதவும் மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்ப்பது வீட்டிலுள்ளவர்களை உயிர்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைக்க உதவும். வீட்டிற்கு புதிதாக வருபவர்கள், நடனமாடுவது போன்ற இதன் அசைவுகளைப் பார்த்து, 'இயற்கையின் அதிசயம்' என்று கூறி கண்கள் விரிய கண்டு ரசிப்பார்கள் என்பது உறுதி. அறிவாற்றலுடன் கூடிய இதன் அசைவுகள் இயற்கையுடன் நாம் இணைந்து வாழ உந்துதல் தரும் என்பது நிச்சயம்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online