Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
80 ஆண்டு கால கெத்து! உலகையே சுழற்ற வைத்த 'வெஸ்பா' ஸ்கூட்டரின் மாஸ் ஹிஸ்டரி!

80 ஆண்டு கால கெத்து! உலகையே சுழற்ற வைத்த 'வெஸ்பா' ஸ்கூட்டரின் மாஸ் ஹிஸ்டரி!

Kalki Online 1 month ago

லகெங்கிலும் ஸ்கூட்டர் ஓட்டும் கலாச்சாரத்தை உருவாக்கி பெண்களுக்கும் இரண்டு சக்கர வாகனத்தை எளிதாக ஓட்டக்கூடிய வசதியைத் தந்தது 1946-ல் இத்தாலி நாட்டில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டர்.

வெஸ்பா என்பது வெறும் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமல்ல; அது உலகளாவிய பேஷன், கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்தின் சர்வதேச அடையாளம். இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளுக்கு நடுவே பிறந்து, இன்று 80 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகப் பயணிக்கும் வெஸ்பா, தனது 80-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இத்தாலி தலைநகர் ரோமில் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான திருவிழாவை நடத்தியது.

1884-ல், இருபது வயது இளைஞர் ரீனால்டோ பியாஜியோ (Rinaldo Piaggio) ஜெனோவாவைத் தளமாகக் கொண்ட பியாஜியோ என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்நிறுவனம் ரயில் பெட்டிகள், சரக்கு வேன்கள், குதிரை வண்டிகள், என்ஜின்கள், டிரக் உடற்பகுதிகள் ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது. மேலும், முதலாம் உலகப் போரின்போது, அது விமானங்கள் மற்றும் கடல் விமானங்களையும் கூட உருவாக்கியது. 1917-ல், பியாஜியோ பிசாவில் (Pisa) ஒரு புதிய ஆலையை வாங்கியது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தாலியின் பொன்டேடெராவில் ஒரு புதிய ஆலையை வாங்கி விமானங்கள் தயாரித்தது. இந்தத் தொழிற்சாலை இரண்டாம் உலகப்போர் குண்டுவீச்சுகளால் கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், பியாஜியோவின் வாரிசு என்ரிக்கோ பியாஜியோவிடம் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வளங்கள் இருந்தன.அங்குதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்பா நிறுவப்பட்டது.

போர் முடிவடைந்த பிறகு, என்ரிக்கோ பியாஜியோ பொதுமக்களுக்கான , அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு குறைந்த விலைப் பொருளை உருவாக்க விரும்பினார். இந்த இலக்கை அடைவதற்காக, கடந்த காலத்தில் பாராசூட் வீரர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு, 'பேபரினோ' என்ற ஸ்கூட்டரை அவர் தயாரித்தார்.

முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது, எனவே, அடுத்த ஆண்டு மக்கள் எளிதாகவும் மலிவாகவும் பயணிக்க ஒரு வாகனம் தேவைப்பட்டபோது, விமான வடிவமைப்பு பொறியாளரான கொராடினோ டி அஸ்கானியோ என்பவரால் ஒரு ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டது.விமானத் தயாரிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செயின்கள் இல்லாத ஒரு முன்மாதிரி ஸ்கூட்டர்யை உருவாக்கினர்.

1946-ஆம் ஆண்டு இந்த ஸ்கூட்டரின் முதல் முன்மாதிரி வடிவமைப்பை பார்த்த பியாஜியோ (Piaggio) நிறுவனத்தின் தலைவர் என்ரிகோ பியாஜியோ, அகலமான பின்பகுதியையும், மெலிதான நடுப்பகுதியையும் பார்த்து அதன் உடலமைப்பு மற்றும் எஞ்சின் சத்தத்தைக் கேட்டு, "இது ஒரு குளவி போல இருக்கிறது" (Sembra una Vespa!) என்று வியந்து கூறினார். அந்த வார்த்தையே ஸ்கூட்டரின் பெயராக நிலைத்துவிட்டது. இத்தாலிய மொழியில் வெஸ்பா' (Vespa) என்றால் குளவி (Wasp) என்று பொருள். அதுவே அந்த வாகனத்தின் பெயராக நிலைத்துப்போனது.

வாட்டர் பாட்டில்ல ஏன் இத்தனை கோடு இருக்கு தெரியுமா.. ஷாக்கிங் உண்மை இதோ!

அது 125சிசி என்ஜினைக் கொண்டிருந்தது. 1946-ல், நிறுவனம் 2484 ஸ்கூட்டர்களை விற்றது, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 10535 ஆக அதிகரித்தது. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்பா முத்திரையுடன் 171200 வாகனங்கள் வெளிவந்தன. வெஸ்பா சந்தைக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஸ்கூட்டர் 13 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, 114 நாடுகளில் விற்கப்பட்டது.

1953-ல் வெளியான உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ரோமன் ஹாலிடே (Roman Holiday), நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் ரோமின் வீதிகளில் வெஸ்பாவில் பயணிக்கும் காட்சிகள் வெளியான பிறகு, வெஸ்பாவின் புகழ் உலகமெங்கும் பரவி, அது ஒரு ஸ்டைல் அடையாளமாக மாறியது.

1960களில் வெளியான 'லா டோல்ஸ் விட்டா" (La Dolce Vita) என்ற இத்தாலி திரைப்படத்தில் வெஸ்பா ஸ்கூட்டர் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. இத்தாலிய மொழியில் "இனிமையான வாழ்க்கை" என்று பொருள்படும் இந்த. புகழ்பெற்ற திரைப்படத்திற்குப் பிறகு, வெஸ்பா ஸ்கூட்டர்கள் இத்தாலியர்களின் சுதந்திரமான, மகிழ்ச்சியான மற்றும் ஸ்டைலான வாழ்க்கை முறையைக் குறிக்கும் சர்வதேச அடையாளமாக மாறின.

 Italian Scooter Culture - வெஸ்பா ஸ்கூட்டர்

1946 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி முதல் வெஸ்பா ஸ்கூட்டர் மத்திய இத்தாலியின் பைசா மாகாணம் டஸ்கனி நகரில் உள்ள பொன்டெடெரா பியாஜியோ' நிறுவன தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தது.இன்றும் அதே தொழிற்சாலையில் இருந்து தான் வெஸ்பா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகிறது.

80 ஆண்டுகளைக் கடந்தும், தலைமுறைகள் தாண்டியும் இளமை மாறாமல் பயணிக்கும் வெஸ்பா, இன்றும் உலகெங்கும் 2 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களுடன் சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ரோமில் 2026 ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற 80வது ஆண்டு வெஸ்பா வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவிற்காக, ரோமின் புகழ்பெற்ற 'போரோ இடாலிகோ' வளாகம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு 'வெஸ்பா வில்லேஜ்' ஆக உருவாக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெஸ்பா கிளப் உறுப்பினர்களும், பல்லாயிரக் கணக்கான வெஸ்பா ரசிகர்களும் தங்களது சொந்த ஸ்கூட்டர்களுடன்இந்த வெஸ்பா வில்லேஜ் முன்பாக அணிவகுத்த காட்சிகள் பார்ப்போரைக் கவர்ந்தன. 1946-ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட விண்டேஜ் மாடல்கள் முதல் நவீன எலக்ட்ரிக் வெஸ்பாக்கள் வரை அனைத்தும் இங்கு பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தத் தொகுப்பின் மூலம் வெஸ்பா எவ்வாறு வெறும் வாகனமாக இல்லாமல், உலகளாவிய கலாச்சாரம் மற்றும் பெண்களின் தனித்துவமான சுதந்திர அடையாளமாக மாறியது என்ற வரலாற்றுப் பின்னணியை நீங்கள் முழுமையாக அறிந்துகொள்வதோடு, ஒரு பிராண்ட் எப்படி தலைமுறைகளைக் கடந்து வாழ்கிறது என்ற உத்வேகத்தையும் பெறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online