Dailyhunt
ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை - அம்பாளை மலர்களால் கொண்டாடுவோம்!

ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை - அம்பாளை மலர்களால் கொண்டாடுவோம்!

Kalki Online 1 year ago
 Flowers

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அம்பாளை அவசியம் தரிசிக்க வேண்டும். பராசக்தியை வழிபட்டு அம்பாளுக்கு உகந்த மலர்களால் பூஜைசெய்வோம்.

ஒவ்வொரு மலர் அர்ச்சனைக்கும் உள்ள பலன்கள் இப்பதிவில்...

 ரோஜா

ரோஜா: ரோஜா மலரால் இராஜேஸ்வரியை பூஜை செய்தால் தேசாதி தேசம் மெச்சும் ஒரு ராஜா போல வாழச்செய்வாள்.

 முல்லை

முல்லை: முல்லை மலரால் மோகனாங்கியை பூஜை செய்தால் இல்லை என்று சொல்லாமலே தனம் அள்ளி அள்ளி தந்திடுவாள்.

 மருக்கொழுந்து

மருக்கொழுந்து: மருக்கொழுந்தால் மனோன்மணியை பூஜை செய்தால் திருக்கோலம் கொண்டு அவள் தினந்தோறும் வந்திடுவாள்.

 ஜாதி

ஜாதி: ஜாதி மலரால் ஜோதி அவளை பூஜை செய்தால் உணராவித்தை எல்லாம் தந்து மேதை என்றே ஆக்கிடுவாள்.

 மகிழம்

மகிழம்: மகிழம் மலரால் மாதாங்கியை பூஜை செய்தால் மணமாகா கன்னியர்க்கு திருமணம் அவள் நடத்தி வைப்பாள்.

 தாழம்பூ

தாழம்பூ: தாழை மலரால் தாட்சாயிணியை பூஜை செய்தால் வாழாப் பெண்ணை நாதனுடன் அவள் சேர்த்து வாழவைப்பாள்.

 பத்திரம்

பத்திரம்: பச்சிலை, பூ, தண்ணீர் ஆகியவற்றால் பகவதியை பூஜை செய்தால் புத்திரபாக்கியம் தந்திடுவாள்.

 தாமரை

தாமரை: தாமரை மலரால் ஷயாமளியை பூஜை செய்தால் தாமதம் செய்யாமல் அவள் தாலி பிச்சை தந்திடுவாள்.

 மல்லிகை

மல்லிகை: மல்லிகை மலரால் மகேஷ்வரியை பூஜை செய்தால் பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் அவள் பின்னாலே ஓடச் செய்வாள்.

 செண்பகம்

செண்பகம்: செண்பக மலரால் அம்பிகையை பூஜை செய்தால், ஜென்மாந்திர பாவம் எல்லாம் தீர்த்து ஓட்டிடுவாள்.

 பாரிஜாதம்

பாரிஜாதம்: பாரிஜாத மலரால் பார்வதியை பூஜை செய்தால் பாலரூபம் கொண்டும் நம் பாவமெல்லாம் போக்கிடுவாள்

 அரளி

அரளி: அரளி மலரால் அபிராமியை பூஜை செய்தால் அளவில்லாத செல்வத்தை அவள் அக மகிழ தந்திடுவாள்.

 செம்பருத்தி

செம்பருத்தி: செம்பருத்தி மலரால் சண்டிகையை பூஜை செய்தால் தந்திரமாய் நம் கனவில் வந்து அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்.

 மருதாணி

மருதாணி: மருதாணி மலரால் மீனாட்சியை பூஜை செய்தால் மாறாத மனத்துடனே பக்தி பாடல்கள் பாடச்செய்வாள்.

 பத்திரி

பத்திரி: பத்திரி மலரால் திரௌபதியை பூஜை செய்தால் அருள் கூர்ந்து நம்முள்ளே அவள் அனுகிரகம் செய்திடுவாள்.

 நீலாம்பரம்

நீலாம்பரம்: நீலாம்பரம் மலரால் நீலாயதாக்ஷியை பூஜை செய்தால் நித்யானந்தம் கொண்டு உலகில் நித்யவாசம் செய்திடுவாள்.

 மனோரஞ்சிதம்

மனோரஞ்சிதம்: மனோரஞ்சிதம் மலரால் மாலினியை பூஜை செய்தால் சுகமான சுகந்தமுடன் அவள் மனம் போல வீசச்செய்வாள்.

 சம்பங்கி

சம்பங்கி: சம்பங்கி மலரால் சர்வேஷ்வரியை பூஜை செய்தால் சகல சௌபாக்யம் தந்து சஞ்சலத்தை நீக்கிடுவாள்.

 சாமந்தி

சாமந்தி: சாமந்தி மலரால் சங்கரியை பூஜை செய்தால் வாழ்வினிலே சந்தோஷத்தை சத்தியமாய் அளித்திடுவாள்

 Suhasini Maniratnamஅழகும் ஆளுமையும் இணையும் இவரிடம்... HBD SUHASINI
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online