Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: பயம் வேண்டாம், முழுமையான வழிகாட்டி!

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: பயம் வேண்டாம், முழுமையான வழிகாட்டி!

Kalki Online 3 weeks ago

ஞ்சியோபிளாஸ்டி என்பது பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன்(PCI) என்றும் அழைக்கப்படுகிறது. இது அடைபட்ட அல்லது குறுகலான தமனிகளைத் திறக்க பயன்படுத்தப்படும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும்.

இது இதயத்திற்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளைத் திறக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மருந்துகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் போதுமானதாக இல்லாத பொழுது ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைக்கப்படுகிறது. இது பல மாரடைப்புகளுக்கு அவசர சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மெல்லிய குழாய், அதன் நுனியில் ஒரு சிறிய பலூன் பொருத்தப்பட்டு, ரத்த நாளத்தின் வழியாக (பொதுவாக மணிக்கட்டு அல்லது இடுப்பு வழியாக) மெதுவாக வழிநடத்தப்பட்டு, அது அடைப்பை அடையும்வரை செலுத்தி, பின்பு பலூன் தமனியை அகலப்படுத்த ஊதப்படுகிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில், ஸ்டென்ட் எனப்படும் ஒரு சிறிய உலோக கண்ணி குழாய் தமனியைத் திறந்து வைத்திருக்கவும் நிலையான ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) என்பது இதயத்திற்கு செல்லும் அடைபட்ட ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தும் சிறு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு முன், மார்பு வலி போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சைக்குப் பின்பு மருத்துவரின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும் மிகவும் முக்கியம்.

 Heart Attack | ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதற்கு முன்பு மருத்துவர் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனைகள், ஈசிஜி(ECG), எக்கோ(Echo) மற்றும் ஆஞ்சியோகிராம் ஆகியவற்றை மருத்துவரின் வழிகாட்டுதலின்படி குறித்த நேரத்தில் முறையாக செய்யப்பட வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முந்தைய 6 முதல் 8 மணி நேரத்துக்கு திட உணவுகள் எதையும் உட்கொள்ளக்கூடாது. தண்ணீர் குடிப்பது குறித்தும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்யும் சமயம், எடுத்துக்கொள்ளும் ரத்த அழுத்த மருந்துகள், நீரிழிவு மாத்திரைகள் அல்லது ரத்தத்தை மெலிக்கும் மருந்துகள்(Blood thinners) குறித்து முதலிலேயே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். செயல்முறை குறித்து பயப்படத் தேவையில்லை. இது பொதுவாக மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் வலியற்ற ஒரு சிறிய செயல்முறை ஆகும்.

தேநீர் குடிப்பதால் பற்கள் நிறம் மாறுமா? - பல் நிபுணர் தரும் 'நச்சுனு 4' பதில்கள்!

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஸ்டென்ட்(Stent) பகுதியில் ரத்தம் உறைவதைத் தடுக்க மருத்துவர் பரிந்துரைக்கும் ஆஸ்பிரின் போன்ற ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் அல்லது மருத்துவர் கூறிய காலம் வரை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காயம் உள்ள இடத்தில் கவனம் தேவை. வடிகுழாய்(Catheter) செலுத்தப்பட்ட மணிக்கட்டு அல்லது இடுப்புப் பகுதியில் சிறிய சிராய்ப்பு அல்லது வீக்கம் இருப்பது இயல்பு. ஆனால் அதிக ரத்தப்போக்கு, சீழ் வடிதல் அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். முதல் சில நாட்களுக்குக் கடினமான வேலைகள், அதிக எடையைத் தூக்குதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் அறிவுரையின்படி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மென்மையான நடை பயிற்சியை மேற்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு முறை அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இதயத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு!

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்யலாம்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online