Dailyhunt
ஆந்திரா ஸ்பெஷல் புலகம் அட்டகாசம்! வேர்க்கடலை சட்னி செம!

ஆந்திரா ஸ்பெஷல் புலகம் அட்டகாசம்! வேர்க்கடலை சட்னி செம!

Kalki Online 1 year ago

ன்றைக்கு அட்டகாசமான ஆந்திரா ஸ்பெஷல் புலகம் மற்றும் வேர்க்கடலை சட்னி ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

புலகம் செய்ய தேவையான பொருட்கள்.

பச்சரிசி-1 கப்.

பாசிப்பருப்பு- ½ கப்.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

நெய்-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

முந்திரி-20.

காய்ந்த மிளகாய்-10

பச்சை மிளகாய்-4

கருவேப்பிலை, கொத்தமல்லி-1 கைப்பிடி.

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-4

உப்பு-1 தேக்கரண்டி.

தண்ணீர்-3 ½ கப்.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

புலகம் செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் 1 கப் பச்சரிசி, ½ கப் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கழுவிய பிறகு 30 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 1 தேக்கரண்டி நெய் சேர்த்து விட்டு 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

காலை உணவுக்கு கறிவேப்பிலை தோசை... சட்டுபுட்டுனு உடனே செய்ய...

இப்போது 20 முந்திரி, 10 காய்ந்த மிளகாய், 4 பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு 4, இஞ்சி 1 துண்டு இவை அனைத்தையும் நன்றாக பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இத்துடன் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை இத்துடன் சேர்த்துக் கொண்டு உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இத்துடன் 3 ½ கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கினால் ஆந்திர ஸ்பெஷல் புலகம் தயார்.

நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்.

வேர்க்கடலை-150 கிராம்.

தனியா- 2 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

குண்டு மிளகாய்-3

நீட்டு மிளகாய்-2

பூண்டு-6

சின்ன வெங்காயம்-4

புளி-எழுமிச்சை அளவு.

கல் உப்பு-1/2 தேக்கரண்டி.

காலையில் வெறும் வயிற்றில் ஓடுவது பற்றிய இந்த உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்.

முதலில் 150 கிராம் வேர்க்கடலையை கடாயில் நன்றாக வறுத்துவிட்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் 2 தேக்கரண்டி தனியா, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடலைப்பருப்பை சேர்த்து வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 3 குண்டு மிளகாய், 2 நீட்டு மிளகாய், புளி ஒரு எழுமிச்சை அளவு, 6 பூண்டு, சின்ன வெங்காயம் 4 ஆகியவற்ற வதக்கி அதையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது இவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கல் உப்பு ½ தேக்கரண்டி தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online