Dailyhunt
ஆறு கஜ அதிசயம்: இந்திய மாநிலங்களின் சேலை அலங்காரங்கள்!

ஆறு கஜ அதிசயம்: இந்திய மாநிலங்களின் சேலை அலங்காரங்கள்!

Kalki Online 2 weeks ago

ந்தியாவில் சேலைக்கு பல நூற்றாண்டுகளாகப் பின்னணியுள்ள உறவு உள்ளது. அது வெறும் ஆடை அல்ல - அது அழகு மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாகும்.

அதை தனித்துவமாக்குவது அதை அணியும் விதம். ஒவ்வொரு மடிப்பும் ஒரு பிராந்தியத்தின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கிறது.

பளபளக்கும் பனாரஸ் ஆகட்டும், தகதகக்கும் காஞ்சிபுரம் ஆகட்டும், மொடமடக்கும் காட்டன் ஆகட்டும், வழுக்கும் ஜார்ஜெட் ஆகட்டும் - எந்த சேலையானாலும் அதை கட்டும் விதத்தில் ஆளை அசர வைக்கும்.

ஆறு அல்லது ஒன்பது கஜ சேலை. ஆனால் அது ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு விதமாக அணிந்து வலம் வருகிறது. அந்த சேலை கட்டும் விதங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு ஆடை அதன் உள்ளூர் மரபுகளால் வேறுபட்ட வடிவங்களாக மாறுகிறது. ஒவ்வொரு பிராந்தியமும் அதன் சேலை அணியும் முறையின் மூலம் தனது பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் சில முக்கியமான சேலை அணியும் முறைகளை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு

மடிசார் டிரேப் (Madisar)

ஒன்பது கஜ சேலை, கீழே வேஷ்டி போன்று மற்றும் மேலே சேலை போன்று அணியப்படும். பிராமணர்களின் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெற்றது.

பின் கொசுவம் (Pin Kosuvam)

மடிப்புகள் முன்புறத்தில் இல்லாமல் பின்புறத்தில் இருக்கும். விவசாய வேலைகளுக்கு ஏற்றதாகும்.

கேரளா

முண்டும் நேரியதும் (Mundum Neriyathum)

இரண்டு துணிகளைக் கொண்ட இந்த முறை, எளிமையும் அழகும் கொண்டது. விழாக்களில் பொதுவாக அணியப்படுகிறது.

க்ளாஸ் ஸ்கின் முதல் நீல ஐ ஷேடோ வரை: 2026-ன் லேட்டஸ்ட் மேக்கப் கையேடு!

ஆந்திரப் பிரதேசம்

நிவி டிரேப் (Nivi Drape)

இன்றைய காலத்தில் மிகவும் பரவலாக அறியப்படும் இந்த முறை ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியது. இடுப்பில் ஒழுங்காக மடிப்புகள் வைத்து, பல்லு தோளின் மேல் விழும். எளிமையானதும் சீரானதுமான இந்த முறை இந்தியா முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

கப்புலு ஸ்டைல் (Kappulu Style)

இது இடமிருந்து வலமாக மடிக்கப்படும் ரிவர்ஸ் முறை. இடுப்பைச் சுற்றி தனித்துவமான மடிப்புகளை உருவாக்கி, வேறுபட்ட தோற்றத்தை தருகிறது.

கோச்சி கட்டு (Gochi Kattu)

நவுவரி ஸ்டைலைப் போன்ற இந்த முறை, சேலையை வேஷ்டி போல அணிய அனுமதிக்கிறது. விவசாயம் போன்ற வேலைகளில் சுலபமாக இயங்க உதவுகிறது.

கர்நாடகா

கூர்கி டிரேப் (Coorgi Drape)

மடிப்புகள் பின்புறத்தில் வைக்கப்படும். பல்லு கை கீழே கொண்டு வந்து தோளில் கட்டப்படுகிறது. மலைப்பகுதிகளில் சுலபமாக இயங்க உதவும்.

ஹலகி வொக்கலிகா டிரேப் (Halakki Vokkaliga Drape)

தோளில் கட்டப்பட்டு அணியப்படும் இந்த முறை, காபி தோட்டங்களில் வேலை செய்ய ஏற்றதாகும்.

அசாம்

மேகேலா சடோர் (Mekhela Chador)

இது ஒரு சேலை அல்ல, இரண்டு துணிகளைக் கொண்டது. கீழ் பகுதி 'மேகேலா', மேலே 'சடோர்'. அழகான அடுக்குகளுடன் கூடிய பாரம்பரிய தோற்றத்தை வழங்குகிறது.

கோவா

குன்பி டிரேப் (Kunbi Drape)

கோவாவில் உள்ள குன்பி கிறிஸ்தவ விவசாயிகள் அணியும் முறை. பெட்டிகோட் இல்லாமல் அணியப்படுகிறது.

தங்காட் டிரேப் (Dhangad Drape)

மேய்ப்பவர்களின் முறை. குறுகிய நீளத்தில் வேஷ்டி போல அணிவதால் சுலபமான இயக்கத்திற்கு உதவுகிறது.

குஜராத்

சீதா பல்லு / குஜராத்தி டிரேப் (Seedha Pallu)

பல்லு பின்புறத்திலிருந்து முன் கொண்டு வந்து வலது தோளில் போடப்படுகிறது. முன்புறத்தில் பல்லுவின் அழகான வடிவங்கள் தெளிவாக தெரியும்.

மகாராஷ்டிரா

நவுவரி / கஷ்டா டிரேப் (Nauvari / Kashta)

ஒன்பது கஜ சேலை வேஷ்டிபோல அணியப்படுகிறது. இயக்க சுதந்திரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.

பார்சி டிரேப் (Parsi Drape)

பல்லு பின்புறத்திலிருந்து முன் கொண்டு வந்து தோளில் போடப்படுகிறது. சீரான மற்றும் அழகான தோற்றம் தருகிறது.

அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலுக்கு கேரட் தரும் மேஜிக்!

மேற்கு வங்காளம்

பெங்காலி (அட்பூரே) டிரேப் (Bengali Atpoure)

பெரிய மடிப்புகள் மற்றும் இரு தோள்களிலும் பல்லு போடப்படும். இது ஒரு அழகான மற்றும் சமச்சீரான தோற்றத்தை தருகிறது.

என்னதான் விதவிதமான ஸ்டைலான ஆடைகளை நாம் எடுத்தாலும், பட்டுப் புடவைக்கும் மற்ற புடவைகளுக்கும் இருக்கும் ஈர்ப்பு வேறு எதற்கும் இல்லை. அந்த புடவை கட்டிய பின் அதில் ஒரு தனி அழகு மிளிரும்.ஈர்ப்பு மட்டுமல்ல, அழகையும் மிளிர்வையும் மரியாதையையும் கொடுக்கும் நம் இந்தியாவின் மிகச்சிறந்த பாரம்பரிய ஆடை புடவைதான்.

புடவை என்பது ஒரு ஆடை மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு. அதை அணியும் ஒவ்வொரு முறையும், நம் கலாச்சாரத்தின் அழகு உயிர்ப்பெடுக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online