Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆழித்தேர் அழகன்: திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்!

ஆழித்தேர் அழகன்: திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்!

Kalki Online 4 months ago

திருவாரூர் தியாகராஜர் கோயில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பெரிய சிவன் கோவில்களில் ஒன்றாகும். இது மூலதானம் எனவும் அழைக்கப்படுகிறது.

தியாகராஜ ஸ்வாமிகள் மற்றும் கமலாம்பாள் இருவரும் முக்கிய தெய்வங்கள் ஆகும். ஆழி தேர் கமலாலயகுளம் மற்றும் அஜபா நடனம் ஆகியவை இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும். இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

சைவ மரபில் பூங்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா மற்றும் ஆழி தேரோட்டம் மிகவும் பிரபலமாக நடைபெறும். இங்குள்ள தேர் உலகிலேயே மிகப்பெரிய தேர் என கருதப்படுகிறது. இங்குள்ள கமலாலய திருக்குளம் பெரிய குளமாக உள்ளது. தியாகராஜரின் அஜபா நடனம் மிகவும் பிரபலமாக இங்கு நடைபெற்று வருகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி நிச்சயம் என்பது இங்குள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்தக் கோவிலில்தான் மனுநீதிச் சோழன் பசுவிற்கு நீதி வழங்கிய இடமாகும். இந்த கோவில 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சைவ சமய குறவரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த இடம் பிரிதிவி தலமாகஉள்ளது.

திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தல விருட்சம் பாதிரி தீர்த்தம் கமலாலயம் மற்றும் சங்குதீர்த்தம்.

ஆண் தெய்வமே முதன்மை மூர்த்தி... ஆனால், ஆண்களுக்கு இந்த கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை!

இந்த கோவில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இங்கு உள்ள சிவன் சுயம்புவமாக அருள் பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் மகாராஜா என்று பொருள்படும்.

ஒன்பது ராஜகோபுரங்கள் என்பது விமானங்கள் 12 மதில்கள் 13 மண்டபங்கள் 15 தீர்த்தக்கிணறுகள் மூன்று நந்தவனங்கள் மூன்று பெரிய பிரகாரங்கள் 365 சிவலிங்கங்கள் இக்கோவிலில்உள்ளது.

இவை தவிர 70 சன்னதிகள் 86 விநாயகர் சிலைகள் 24 உள் கோவில்கள் கொண்டது. தியாகராஜர் முக தரிசனம் காண்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. திருப்பாற்கடலில் உள்ள பெருமாள் தியாகராஜரை தன் மார்பில் வைத்து பூஜித்ததாக வரலாறு. எனவே திருமால் மூச்சு விடும் போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சிவன் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்தப் கோவிலில் தினசரி சாய் ரட்சை பூஜையின்போது தேவேந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் இங்கு செல்லாது.

இக்கோவில் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வடமேற்கு திசையில் சிவனை நோக்கி வரிசையாக உள்ளனர். அதாவது தியாகராஜரை நவகிரகங்கள் வழிபடுவதாக உள்ளது.

இந்த கோவில் சைவ சமயத்தில் தலைமை பீடமாக உள்ளது.

விஷ்ணு இந்திரன் நடத்திய யாகத்தில் வெற்றி பெறுவதற்காக சிவ தனுசுவை பயன்படுத்தி அதன் மூலம் வெற்றி பெற்றார்கள்

அந்த களைப்பில் விஷ்ணு சிவ தனுசுவை தன் தலையின் அடியில் வைத்து உறங்கினார். அப்போது தேவர்கள் புற்று உருவில் தோன்றி சிவ தனுசுவை கொஞ்சம் கொஞ்சமாக அரித்தனர். அப்போது வில்லில் இருக்கும் நாண் அறுந்து விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்டது. தேவர்கள் பயந்துபோய் சிவனை வழிபட்டனர். அப்போது சிவன் விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்தார்.

சிவன் புற்றில் இருந்து தோன்றியதால் புற்றுடன் கொண்ட பெருமான் என அழைக்கப்படுகிறார்.

மனுநீதிச் சோழன் பசுவிற்காக தன் மகனை கொன்றபோது அவருக்கு சிவன் மீண்டும் உயிர் பிச்சை வழங்கிய இடமாகும். எல்லா கோவில்களிலும் சிவனுக்கு முன்பாக நந்தி அமர்ந்த நிலையில் இருக்கும். ஆனால் இங்கு சிவனுக்கு எதிரே நந்தி பகவான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். சிவன் வெளியே கிளம்பும்போதும் நந்தி நின்றபடியே செல்கிறார்.

சாதி பேதம் கடந்த சமத்துவச் சுடர்: எம்பெருமானார் இராமானுஜர்!

தியாகராஜர் அர்த்தமண்டபத்தில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இதை ஒட்டி ஆழி தேரோட்டமும் தெப்ப உற்சவம் நடைபெறும். இங்குள்ள நவகிரகங்கள் வடமேற்கு மூலையில் வரிசையாக சிவனை நோக்கி வழிபடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் சிவனின் கட்டுப்பாட்டில் உள்ளது எனவே நவக்கிரகங்களின் செயல்பாடுகள் மக்களை பாதிக்காது என்பது ஐதீகம்.

மகாலட்சுமி மகாவிஷ்ணுவை திருமணம் செய்தது இந்த தளத்தில் தான். இங்கு வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும். இந்திரனுக்கு ஏற்பட்ட சருமநோய் இங்குள்ள சிவனை வழிபட்ட பின்பு இந்திரனுக்கு சருமநோய் குணமானதாக வரலாறு.

கமலாலயம் 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online