Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐபிஎல் 2026: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவை தகர்த்து டெல்லி அபார வெற்றி..!

ஐபிஎல் 2026: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவை தகர்த்து டெல்லி அபார வெற்றி..!

Kalki Online 2 days ago

பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்று இரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகளை எடுத்துள்ளது. இந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்யுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்-ரேட்டில் (-0.871) பின்தங்கி இருப்பதால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனிமேல் அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 15-ல் டெல்லியும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணியால் டெல்லி அணியின் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது..

அதேசமயம் டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online