Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு கெத்தாக நுழைந்தது ராஜஸ்தான்..!!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு கெத்தாக நுழைந்தது ராஜஸ்தான்..!!

Kalki Online 2 days ago

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றைய லீக் போட்டியில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.

இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

மும்பை அணி 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் எடுத்துள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சனையும் இன்றி அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கும். மாறாக தோல்வி கண்டால் வெறியேற வேண்டியது தான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 16-ல் மும்பையும், 15-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணியால் ராஜஸ்தானின் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் பிளே-ஆப் சுற்றை தக்க வைத்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online