Dailyhunt
அல்டிமேட் டேஸ்டில் சோளா பூரி - வடகறி செய்யலாம் வாங்க!

அல்டிமேட் டேஸ்டில் சோளா பூரி - வடகறி செய்யலாம் வாங்க!

Kalki Online 1 year ago

ன்றைக்கு சுவையான சோளா பூரி மற்றும் வடகறி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

சோளா பூரி செய்ய தேவையான பொருட்கள்;

மைதா மாவு- ½ கிலோ.

தயிர்-25 கிராம்.

ரவை-1 ½ தேக்கரண்டி.

சர்க்கரை-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

சோளா பூரி செய்முறை விளக்கம்.

ஒரு பவுலில் ½ கிலோ மைதா, 25 கிராம் தயிர், 1 ½ தேக்கரண்டி ரவை, 1 தேக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் மூடி வைத்துவிடவும்.

இப்போது மாவை எடுத்து இழுத்து இழுத்து பிசைந்துவிட்ட பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு உருண்டையை எடுத்து மாவு சிறிது தூவி நன்றாக மாவை வார்த்து அடுப்பில் கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மாவை போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். சுவையான 'புசுபுசு' சோளாபூரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வடகறி செய்ய தேவையான பொருட்கள்;

அடை செய்ய,

கடலைப்பருப்பு-1 கப்.

பூண்டு-3

சோம்பு-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

குக்கரில் செய்ய,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

பட்டை-1

கிராம்பு-2

பிரியாணி இலை-1

ஏலக்காய்-2

சோம்பு-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1

இஞ்சிபூண்டு விழுது-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

புதினா-சிறிதளவு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

தண்ணீர்-2 கப்.

கொத்தமல்லி-சிறிதளவு.

நாவூர வைக்கும் முட்டைகோஸ் பொரியல் - அசோகா அல்வா ரெசிபிஸ்!

வடைகறி செய்முறை விளக்கம்;

முதலில் பவுலில் கடலைப்பருப்பு 1 கப்பை தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும். இப்போது ஊறவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் பூண்டு 3, வரமிளகாய் 1, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதை தோசைக்கல்லில் அடைப்போல தட்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை1, கிராம்பு 2, பிரியாணி இலை 1, ஏலக்காய் 2, சோம்பு 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, புதினா சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தோசைக்கல்லில் தட்டி வைத்த அடையை சின்ன சின்னதாக பிய்த்து அதில் சேர்த்துக்கொள்ளவும்.

அத்துடன் மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிறிதளவு, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கிண்டிக் கொள்ளவும். இப்போது 2கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து எடுத்தால் சூப்பரான வடைகறி தயார். கடைசியாக, கொத்தமல்லி தூவி பரிமாறவும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online