Dailyhunt
அல்டிமேட் சுவையில் 'ஃபுரூட்டி' ரெசிபி - பைனாப்பிள் புளிசேரி ; வாட்டர்மெலன் கறி

அல்டிமேட் சுவையில் 'ஃபுரூட்டி' ரெசிபி - பைனாப்பிள் புளிசேரி ; வாட்டர்மெலன் கறி

Kalki Online 1 year ago

ன்றைக்கு அல்டிமேட் சுவையில் பைனாப்பிள் புளிசேரி மற்றும் வாட்டர்மெலன் கறி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

பைனாப்பிள் புளிசேரி செய்ய தேவையான பொருட்கள்:

பைனாப்பிள்-2 கப்.

தேங்காய்-1 கைப்பிடி.

சீரகம்-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

வெல்லம்-1 சிட்டிகை.

கருவேப்பிலை-சிறிதளவு.

தயிர்-1 கப்.

தாளிக்க,

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1தேக்கரண்டி.

வெந்தயம்-1/2 தேக்கரண்டி.

பைனாப்பிள் புளிசேரி செய்முறை விளக்கம்.

முதலில் நறுக்கி வைத்த பைனாப்பிள் 1 கப்பை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் தேங்காய் 1 கைப்பிடி, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் தண்ணீர் 1கப் விட்டு நறுக்கிய பைனாப்பிள் 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

பைனாப்பிள் நன்றாக வெந்ததும் 1 சிட்டிகை வெல்லம், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து விட்டு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டையும் சேர்த்து கலந்துவிடவும். நன்றாக கொதித்ததும் 1கப் தயிரை சேர்த்து கலந்துவிடவும்.

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் ½ தேக்கரண்டி சேர்த்து தாளித்து இதில் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான பைனாப்பிள் புளிசேரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வாட்டர்மெலன் கறி செய்ய தேவையான பொருட்கள்:

வாட்டர்மெலன் தோல்-1 கப்.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

மஞ்சள்தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

தேங்காய்-1 கைப்பிடி.

பச்சை மிளகாய்-1.

வாட்டர்மெலன் கறி செய்முறை விளக்கம்.

வாட்டர் மெலன் தோலை வீணாக்காமல் அதை தோல் சீவி பொடி பொடியாக 1 கப் அளவிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4 சேர்த்து பொரிந்த பிறகு நறுக்கி வைத்த வாட்டர்மெலன் தோலை சேர்த்துக் கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது இதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்துக் கலந்துவிடவும். இப்போது இதை பத்து நிமிடம் மூடி வேகவிடவும். மிக்ஸியில் தேங்காய் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 1 சேர்த்து அரைத்து அதை வாட்டர்மெலனில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான வாட்டர்மெலன் கறி தயார். இது சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சூப்பர் சுவையில் ரவா இட்லி - உருளைக்கிழங்கு ரைஸ் ரெசிபிஸ்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online