Monkeys
Birds' eggs in many colors
Block forest
Spiderweb
The world's highest railway line1. தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என உணர்த்தும் மூன்று குரங்குகள் பெயர் பெற்றவை.
அவை ஜப்பான் நாட்டில் நிக்கோ என்னும் நகரத்திலுள்ள புத்தர் கோயிலின் ஓவியங்கள். அதைத் தான் பொம்மைகளாக விற்பனை செய்கின்றனர். அந்த ஓவியத்தை தீட்டியவர் ஹிதாரி ஜிஸ்கோ என்ற புகழ் பெற்ற ஓவியர். அந்த குரங்குகளுக்கு மிஜாரு, கிஜாரு மற்றும் இஜாரு என்று ஜப்பானில் பெயர்கள் உண்டு.
2. சாண்டி எனும் வகை சிகப்பு கோழி பச்சை முட்டை இடும். காட்டு வாத்துக்கள் கருப்பாக முட்டையிடும். அருகானா இனக் கோழிகள் நீலமாக முட்டையிடும். ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.
3. ஜெர்மன் நாட்டிலிருந்து நெதர்லாந்து செல்லும் பாதையில் ப்ளாக் ஃபாரஸ்ட் என்ற இடம் உள்ளது. இங்குள்ள மண்ணில் இரும்புத் தாது இருப்பதால், மரங்களின் நிறம் எல்லாம் கருப்பாக இருக்கும். எனவே இந்தப் பகுதிகள் கருப்பு காடுகள் எனப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற குக்கூ கடிகாரங்கள் இந்த மரத்திலிருந்து தான் தயாரிக்கப் படுகின்றன. இங்கு மிகப் பெரிய கடிகார தொழிற்சாலைகள் உள்ளன.
4. சிலந்தி பூச்சியின் வலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்று போல் இருக்காது.
கங்காருவின் வால் வெறும் வால் அல்ல குட்டீஸ்! அது ஒரு 'ஐந்தாவது' கால்! மிரள வைக்கும் உண்மைகள்!5. தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும்,பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில் பாதை ஆர்டிக் மலையில் 4,744.7 மீ உயரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும்.
தம்பிரான் வணக்கம்
Howler monkey
Karolinska Institute
Doctrina Christam book printing
A Readable Hand Fan
First Testament 6. உலகிலேயே அதிகமாக ஒலி எழுப்பத் கூடிய விலங்கு ஹாவ்லர் குரங்கு (howler monkeys). இந்த இன ஆண் குரங்கு சப்தமிடும் போது 16 கி.மீ தூரம் வரை கேட்கும்.
7. சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா கல்வி மையம் ஐரோப்பாவின் தலைசிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாகும். மருத்துவத்திற்கான நோபல் பரிசை இந்த பல்கலைக்கழகம் தான் தீர்மானிக்கிறது.
8. இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் 'தம்பிரான் வணக்கம்' (Doctrina Christam) என்பதாகும். 1557 ல் கோவாவில் அச்சிடப்பட்ட இப்புத்தகம் புனித சேவியரைப் பற்றிய வினா-விடை தகவல்களை கொண்டது.
9. உலகிலேயே முதன்முதலில் படிக்கக்கூடிய கை விசிறி சீனாவில் ஜியாங்க என்ற கிராமத்தில் தயாரிக்கப்பட்டது.
10. முதன் முதலில் உயில் எழுதும் வழக்கம் கிபி 1102-ல் சிசிலி நாட்டில் தொடங்கியது. மன்னர் ரோஜர் தன் சொத்துக்களை உயிலாக எழுதி பதிவு செய்தார். இதற்கு பின்தான் உயில் எழுதி வைக்கும் முறை பிற நாடுகளுக்கு பரவியது.

