Dailyhunt
பலரும் அறியாத பட்ஜெட் பயணம்: ஒரே இடத்தில் 99 தீவுகள்... லங்காவியின் மறைக்கப்பட்ட ஆச்சரியங்கள்!

பலரும் அறியாத பட்ஜெட் பயணம்: ஒரே இடத்தில் 99 தீவுகள்... லங்காவியின் மறைக்கப்பட்ட ஆச்சரியங்கள்!

Kalki Online 1 week ago

லேசியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள லங்காவி, இயற்கை எழில் கொஞ்சும் 99 தீவுகளின் கூட்டமாகும்.

இது 'கெடா மாநிலத்தின் ஆபரணம்' அல்லது 'கெடா மாநிலத்தின் முத்து' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு, அதன் நீல நிறக் கடல், அடர்ந்த காடுகள் மற்றும் வரி இல்லாத வர்த்தகத்திற்காக உலகப் புகழ் பெற்றது.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் 'ஜியோபார்க்' என்ற பெருமையையும் இது கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் லங்காவியின் சிறப்பம்சங்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

1. லங்காவி ஸ்கை பிரிட்ஜ் மற்றும் கேபிள் கார்:

லங்காவியின் மிக முக்கியமான அடையாளம் கேபிள் கார் மற்றும் ஸ்கை பிரிட்ஜ் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 650 முதல் 670 மீட்டர் உயரத்தில் இந்த கேபிள் காரில் பயணிப்பதன் மூலம், மலைகளின் அழகையும் அந்தமான் கடலின் பரந்து விரிந்த காட்சியையும் காணலாம். இதன் உச்சியில் அமைந்துள்ள வளைந்த நடைபாலம், உலகின் மிக நீண்ட வளைந்த தொங்கு பாலங்களில் ஒன்றாகும். மேகங்களுக்கு நடுவே நடப்பது போன்ற உணர்வைத் தரும் இது, சாகச விரும்பிகளுக்குப் பிடித்தமான இடமாகும்.

வீக்கெண்ட் போர் அடிக்குதா? சென்னையிலிருந்து வெறும் 2 மணி நேர பயணத்தில் ஒரு ரகசிய அருவி!

2. அழகிய கடற்கரைகள்:

லங்காவியில் பல அழகிய கடற்கரைகள் இருந்தாலும், பந்தாய் செனாங் கடற்கரை மிகவும் பிரபலமானது. இங்கு நீர் விளையாட்டுக்கள், உணவகங்கள் அதிகம். அமைதியை விரும்புபவர்கள் தஞ்சோங் ரூ கடற்கரைக்குச் செல்லலாம். இதன் தெளிவான நீரும், வெள்ளை மணலும் மனதிற்கு அமைதியைத் தரும்.

 langkawi island

3. தீவுச் சுற்றுலா:

லங்காவியில் உள்ள மற்ற சிறிய தீவுகளைக் காண 'ஐலேண்ட் ஹாப்பிங்' பயணம் சிறந்தது. குறிப்பாக, புலாவ் டயான் புந்திங் எனுமிடத்தில் உள்ள 'கருவுற்ற கன்னி ஏரி' ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரியில் குளித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்ற ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை நிலவுகிறது.

புலாவ் சிங்கா பெசார் எனப்படும் பகுதியில் கழுகுகளுக்கு உணவளிக்கும் காட்சியைக் காண்பது மிகச்சிறந்த அனுபவமாகும். பொதுவாக, மலாய் மொழியில் 'லங்காவி' என்ற பெயர் 'செம்பழுப்பு நிற கழுகு' என்று அர்த்தம்.

4. கிலிம் கார்ஸ்ட் ஜியோபாரஸ்ட் பார்க்:

இயற்கை ஆர்வலர்களுக்கு இந்தப் பயணம் ஒரு வரப்பிரசாதம். படகு மூலம் சதுப்புநிலக் காடுகளுக்குள் பயணிக்கும்போது, ஆற்றுக்கு நடுவே உள்ள குகைகள், வௌவால் குகை மற்றும் முதலைப் பண்ணை போன்றவற்றை காணலாம். மேலும், அடர்ந்த காடுகளுக்கு இடையே குரங்குகளையும், அபூர்வ பறவைகளையும் பார்க்கலாம்.

5. ஈகிள் ஸ்கொயர்:

குவா படகுத்துறையில் அமைந்துள்ள 12 மீட்டர் உயரமுள்ள ராட்சதக் கழுகுச்சிலை லங்காவியின் முக்கிய அடையாளமாகும். பயணிகள் கப்பல் மூலம் தீவுக்குள் நுழையும்போது, இந்தக் கழுகுச்சிலை அவர்களை வரவேற்பது போல் கம்பீரமாக நிற்கும். இது புகைப்படம் எடுக்க மிகச்சிறந்த இடமாகும்.

லடாக் பயணத்தின் மணிமகுடம்: பாங்காங் ஏரியைப் பற்றித் தெரியுமா?

லங்காவி தீவின் சிறப்பம்சங்கள்:

  • லங்காவியைச் சுற்றிப் பார்க்க நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் மிகவும் சிறந்தது.

  • மேலும், லங்காவி ஒரு வரி இல்லாத தீவு என்பதால் சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை மலிவான விலையில் வாங்கலாம்.

  • தீவுக்குள் சுற்றிப் பார்க்க கார் அல்லது ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுப்பது எளிது. பொதுப் போக்குவரத்து குறைவாக இருப்பதால், 'Grab' செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • இங்கு கடல் உணவுகள் மிகவும் பிரபலம். தென்னிந்திய மற்றும் மலாய் உணவுகளும் தாராளமாகக் கிடைக்கும்.

அமைதி, சாகசம், ஷாப்பிங் மற்றும் இயற்கை அழகு என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க விரும்புபவர் களுக்கு மலேசியாவின் லங்காவி தீவு ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். குடும்பத்துடனும் நண்பர் களுடனும் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய அற்புதமான சுற்றுலாத் தலம் இது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online