Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேச்சுக்கலையில நீங்க கெத்தா மாறணுமா... இந்த சீக்ரெட் பார்முலாவை உடனே கத்துக்கோங்க!

பேச்சுக்கலையில நீங்க கெத்தா மாறணுமா... இந்த சீக்ரெட் பார்முலாவை உடனே கத்துக்கோங்க!

Kalki Online 3 days ago

மது அன்றாட வாழ்வில் பலருடன் நாம் தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் அதில் ஒரு சிலரிடம் மட்டுமே நாம் கேட்பதை உடனே சாதித்துக்கொள்கிறோம்.

மற்றவர்களிடம் பேசுவது என்பது வேறு, அவர்களை நாம் நினைக்கும் திசையில் சிந்திக்க வைப்பது என்பது வேறு.

பேச்சாற்றல் மூலம் மற்றவர்களின் மனதை வென்று நமக்குச் சாதகமாக முடிவுகளை எடுக்க வைக்கும் தந்திரத்தைத்தான் நாம் பேச்சுக்கலை என்று கூறுகிறோம். இது பொய் சொல்லியோ அல்லது ஏமாற்றியோ சாதிப்பது அல்ல. இது எப்படிச் சாத்தியம் என்பதைப் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

கேட்பவர்களின் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்!

பெரும்பாலானவர்கள் பேசும்போது நான், எனது என்று தங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். ஆனால் ஒருவரை நாம் சம்மதிக்க வைக்க வேண்டும் என்றால் நாம் பேசுவது அவர்களைப் பற்றியதாக எப்போதுமே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றால், எனக்காக இந்த வேலை வேண்டும் என்று சொல்வதை விட, உங்களின் நிறுவன வளர்ச்சிக்கு நான் எந்த வகையில் லாபமாக இருப்பேன் என்று ஆணித்தரமாகப் பேச வேண்டும். அதுதான் மற்றவர்களை நம்மை நோக்கி மிகவும் ஆழமாக ஈர்க்கும் ஒரு சிறந்த தந்திரமாகும்.

நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும்!

நாம் என்னதான் சிறப்பாகப் பேசினாலும் மற்றவர்கள் நம்மை முழுமையாக நம்ப வேண்டும். அதற்குச் சிறந்த வழி நம்மிடம் உள்ள சில குறைகளையும் வெளிப்படையாக தைரியமாகப் பேசுவதாகும். நமது குறையை நாமே சொல்லும்போது நம்முடைய நேர்மை அங்கு மிகத் தெளிவாக வெளிப்படும்.

அப்படி நம்மைப் பற்றிய உண்மை நிலையைச் சொன்ன பிறகு நாம் நம்மிடம் உள்ள முக்கிய திறமையைப் பற்றிப் பேசும்போது அந்த வார்த்தைகளுக்கு அதிக மதிப்பும் நம்பகத்தன்மையும் நிச்சயமாகக் கிடைக்கும். இதைத்தான் மாபெரும் தலைவர்கள் பலரும் செய்கிறார்கள்.

 Persuasion skills பேச்சுக்கலை

பாராட்டுகள்!

நமது பேச்சுக்கலை மேலும் சிறப்பாக அமைய மற்றவர்களைச் சரியாகப் பாராட்டும் குணம் நமக்கு இருக்க வேண்டும். வெறுமனே நன்றாக இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அவர்கள் எந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டி கஷ்டப்பட்டு வேலை செய்தார்களோ அதைச் சுட்டிக்காட்டி மிகத் தெளிவாகப் பாராட்ட வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்களுக்கும் நம் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் சுலபமாக உருவாகும். நாம் சொல்வதை அவர்கள் கொஞ்சம் கவனமாகக் கேட்பார்கள்.

ஓவரா சீன் போடுபவரை எப்படி எதிர்கொள்வது?

அவசர முடிவுகள் வேண்டாம்!

சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லை என்றால் நாம் அதிகமாகக் கவலைப்படுகிறோம். இந்த அதிகப்படியான எதிர்பார்ப்பு நமது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்துவிடும். இது நேர்காணலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த விஷயமாக இருந்தாலும் சரி. பதற்றத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதுமே மிகவும் தவறாகத்தான் இருக்கும்.

அதனால் எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்பும் அமைதியாகச் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் அவசியம். இதை 10-10-10 என்ற உளவியல் தந்திரம் மூலம் கையாளலாம். இது எப்படி என்றால் இப்போது நடக்கும் சம்பவம் இன்னும் 10 நிமிடம், 10 மாதம், மற்றும் 10 வருடங்கள் கழித்து எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்தித்துச் செயல்படுவதாகும்.

'நான் இல்லனா எதுவும் நடக்காது' - இந்த எண்ணம் ஆபத்தானதா?

ஒருவரிடம் வேலை வாங்கவோ அல்லது சம்மதம் வாங்கவோ எந்தவிதமான குறுக்கு வழியும் எப்போதுமே தேவையில்லை. மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமையாகப் பேசுவதுதான் பேச்சாற்றலின் மிக முக்கிய ரகசியமாகும்.

இந்தப் பழக்கங்களை நாம் அன்றாடம் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் நாம் விரும்பிய உயரங்களை எந்தவிதத் தடையுமின்றி எளிதாக அடைந்து மாபெரும் வெற்றியாளர்களாக வலம் வரலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online