Flamingo Birdஇவைகளை தமிழில் பூ நாரை அல்லது செங்கல் நாரை என்று அழைப்பார்கள். நாரை வகையை சார்ந்தவை.
Flamingo Bird பல நூற்றுக் கணக்கான பிளமிங்கோ பறவைகள் ஒன்றாக கூடி நீர் நிலையில் ஆக்கிரமித்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி ஆகும்.
Flamingo Birdஇதன் ஆங்கிலப் பெயரான பிளமிங்கோ இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.
Flamingo Birdஇதன் அலகு மிகவும் நீண்டு இருக்கும். வளைந்தும் காணப்படும். அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும்.
Flamingo Birdகடல் ஓரப் பகுதிகள், ஆழம் குறைந்த ஏரிகள், குளங்கள் இவற்றில் சிறிய அல்லது பெரிய குழுக்களாக இரை தேடும்.
Flamingo Birdஆழம் குறைந்த பகுதிகளில் கழுத்தைத் தாழ்த்தி தலையை முழுவதும் நீரில் செலுத்தி இரை தேடும்.
Flamingo Birdமீன்கள், நண்டுகள், புழுக்கள், இறால்கள், பூச்சிகள், பாசிகள் ஆகியவற்றை உண்ணும்.
Flamingo Birdபறக்கின்ற பொழுது இறக்கைகளில் இருக்கும் கரு நிறம் நன்றாக தெரியும்.
Flamingo Birdபூ நாரைகள் நமது நாட்டின் கட்ச் பகுதியில் கூடுகள் அமைகின்றன. அங்கு இலட்சக் கணக்கான பறவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
Flamingo Birdதரையிலிருந்து 30 செமீ உயரத்துக்கு மண்ணைக் கொண்டு சிறிய மண் பானை வடிவில் கூடுகள் அமைக்கும் திறமை கொண்டவை இந்த வகை பறவைகள்.
Flamingo Birdவருடத்துக்கு ஒரேயொரு முட்டைதான் இடும். பிளமிங்கோ குஞ்சு பருவத்தில் சாம்பல் நிறத்தில் இருக்கும். வளர்ந்ததும் இளஞ் சிவப்பு வண்ணத்தை பெறுகின்றன. இவை சராசரியாக 30 - 40 வயது வரை உயிர் வாழுகின்றன.
Flamingo Birdவகைகளுக்கு ஏற்ப பிளமிங்கோ பறவைகளின் உயரம், எடை ஆகியவை வேறுபடும்.
Flamingo Birdபொதுவாக பிளமிங்கோ பறவைகள் தங்கள் உணவுகளை அப்படியே உண்ணாது. வடி கட்டிய (filter) பிறகு விழுங்கி விடும்.
Flamingo Birdஇவை உணவுகளுக்காக இடம் பெயரும் தன்மை உடையவை.
Flamingo Birdகூட்டமாக ஆகாயத்தில் பறக்கும் காட்சி தனி தன்மை பெற்றது. பார்ப்போரை பரவசம் அடைய வைக்கும்.
Leo Tzu QuotesLeo Tzu Quotes: சீன தத்துவஞானி லாவோட்ஸு பொன்மொழிகள்!
