ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நம் நம்பிக்கை. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 500ஆண்டுகள் பழமையான வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு உள்ளது. இக்கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பிரசாதமாக வழங்கப் படுகிறது
விநாயகரின் மகிமை
காணிப்பாக்கம் என்ற இடத்தில் இந்த விநாயகர் கோவிலில் ஒரு உத்தரிணி தீர்த்தம் பெற்றுக்கொள்ள கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் நோய்கள் மற்றும் எல்லா பிணிகளும் எல்லாம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வினாயகர் தோன்றியதே அந்த காணிப்பாக்கம் கிணற்றில்தான். இவரைச் சுற்றி எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கிறது நம் ஊர் பிள்ளையார் போன்று இதற்கு எந்த அலங்காரமும் கிடையாது. நீண்ட தும்பிக்கை, பெரிய காது சிறிய கண்கள் எல்லாம் கிடையாது சுயம்புவாக எப்படித் தோன்றினாரோ அப்படியே கொழுக் மொழுக் கென்று இருக்கிறார்.
பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். இந்த விநாயகர் நல்லவருக்கு நல்லவர். கெட்டவருக்கு கெட்டவர் என்று செல்கிறார்கள். அது உண்மைதான். யாராவது ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால் அவரை தரதரவென்று இழுத்து இங்கே அழைத்து வருகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். காணிப்பாக்கம் விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறே எதுவும் இல்லை என்ற சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராம பஞ்சாயத்துகளில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
காரணம் இந்த வினாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவாராம். ஊனமுற்றவர் களுக்கு கூட இந்த விநாயகரைப் பிடிக்கும். காரணம் இவர் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குதான்.
ஒன்பது வாசல் கடந்து ஒரு தரிசனம்! ஸ்ரீரங்கம் கோயிலின் ரகசியம் தெரியுமா?இந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் விஹாரபுரி என்ற இந்த ஊரில் மூன்று ஊனமுற்றவர்கள் இருந்தார்கள். ஒருவருக்கு பேசமுடியாது,ஒருவருக்குக் கண் தெரியாது ஒருவருக்கு காது கேட்காது. மூவரும் ஒற்றுமையாக விவசாயம் செய்தார்கள். கோடைக்லத்தில் அவர்கள் கிணறு வற்றியதால் ஆழப்படுத்த முனைந்தார்கள். பூமியைத் தோண்டும் போது ஒரு பாறை மீது கடற்பாறை பட்டு டங்கென்று ஓசையுடன் இரத்தம் பீரிட்டு வருவதைப் பார்த்து வாய் பேசாதவன் ஐயோ இரத்தம் என அலறினான். காது கேட்காதவனுக்கு இது கேட்டது. எட்டிப் பார்த்த கண் தெரியாதவனுக்கு என்ற ஒரே சிவப்பாக இருக்கிறதே என்று தனக்கு கண் தெரிந்ததுபற்றி வியந்தான்.
மூவர் குறைகளும் தீர்ந்தது கண்டு அந்த கிராம மக்கள் அதிசயித்தனர். கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர். அங்கு வரசித்தி வினாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தியுடன் வணங்கினர். இன்றைக்கும் மண்வெட்டி தழும்பு விநாயகர்சிரசில் உள்ளது. காணி நிலத்தில் தோன்றிதால் காணிப் பாக்கம் வினாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. மிகவும் சிறியதாக இருந்த கோவிலை 11ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் பெரிதாகக் கட்டி திருப்பணி செய்தார்.
இக்கோவில் அருகில் பாகுதாநதி காணப்படுகிறது அந்தக் காலத்தில் அரசனுக்கும் சொந்தமான மாந்தோட்டம் இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதாஎன்பவன் பறித்து சாப்பிட்டான். வெகுண்ட அரசன் அவன் இருகைகளையும் வெட்டிவிட்டான். மன வருத்தம் அடைந்த விகிதா பாகுதா நதியில் நீராடி காணிப்பாக்கம் வினாயகரை நோக்கி"பாகு தா(கை தா) என்று வேண்டினான். அவனுக்கு கை கிடைத்தது. நதிக்கு பாகுதா என்ற பெயர் ஏற்பட்டது காணிப்பாக்கம் வினாயகர் அளவிட முடியாத கருணையுடன் இங்கு அருள் பாலிக்கிறார்.

