Dailyhunt
#BREAKING: 2 ஹெலிகாப்டர்களை தாக்கிய ஈரான்.! 8 பாலங்களை தகர்பபோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை.!

#BREAKING: 2 ஹெலிகாப்டர்களை தாக்கிய ஈரான்.! 8 பாலங்களை தகர்பபோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை.!

Kalki Online 2 weeks ago

டந்த ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் எப்-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த விமானத்தின் விமானியை தேடும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

ஆனால் இந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும் ஈரான் தாக்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் எப்-35 போர் விமானத்தின் விமானி குஸெஸ்தான் மாகாணத்தில் தரை இறங்கியிருக்கலாம் என ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது

#JUST IN: தீவிரமடையும் போர்.! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.!

நேற்று முன்தினம் ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலமான பி1 பாலத்தை அமெரிக்கா, ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்த்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஈரான். அதோடு அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது.

பலம் வாய்ந்த அமெரிக்காவிற்கு எதிராக, ஈரான் சமமான தாக்குதலை நடத்தி வருவது உலகளவில் பிரமிப்பாக பார்க்கப்படுகிறது.

இது தவிர அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெகு விரைவில் வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தகர்ப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

#JUST IN : ரூ.3,750 கோடி எல்ஐசி பணம் எங்கே? - அனில் அம்பானி மீது பாயும் சிபிஐ..!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online