Dailyhunt
#BREAKING IPL 2026: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்..!!

#BREAKING IPL 2026: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்..!!

Kalki Online 2 weeks ago

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது.

இந்த சீசனில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் தோல்வி சந்தித்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டிக்கான டாஸில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹைதராபாத் பேட்டிங்கில் களம் இறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் கொல்கத்தா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் தனது 2-வது தோல்வியை பதிவு செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online