Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்களை மீட்டது இந்திய அரசு.!

#BREAKING: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்களை மீட்டது இந்திய அரசு.!

Kalki Online 3 weeks ago

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பேருந்துகள், வீடுகள், சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளப் பெருக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் 700 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா சார்பாக 10 டன் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேபாள மக்களின் துயர் துடைக்க தற்போது ஐநாவும் களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேபாள் வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்களை மீட்டது இந்திய அரசு.

பெண்களுக்கு ஜாக்பாட்: சுயதொழிலுக்கு எளிய கடன்.! கூடவே வீடும், சோலார் அடுப்பும்! முழு விவரம் இதோ!

சென்னை குரோம்பேட்டையில் இருந்து 49 பேர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நேபாளுக்கு சென்றனர். இந்த 49 பேர் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. அதோடு இவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என இந்திய வெளியுறவுத் துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற 54 பேரில் 21 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளில் சிக்கிய 288 இந்தியர்களைத் தேடும் படி தற்போது தீவிரமடைந்துள்ளது.

நேபாள் வெள்ளத்தைத் தொடர்ந்து, பீஹாரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் சாம்ராட் சவுத்ரி வான்வழியாக ஆய்வு செய்தார்.

டெல்லிக்கு விரையும் 4 அமைச்சர்கள்:

நேபாள் வெள்ளம் குறித்து இன்று (ஆகஸ்ட் 27) மதியம் முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் டெல்லிக்கு செல்ல முதல்வர் உத்தரவிட்டார்.

டெல்லிக்கு சென்று மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், மீட்கப்பட்ட தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டனர்.

நேபாளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல எனவும், பனிப்பாறை உருகியது தான் காரணம் எனவும் அமெரிக்க விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களை ஆதாரமாகக் கெண்டு அமெரிக்கா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நேபாள் வானிலை ஆய்வு மையமும் பனிப்பாறை உடைந்தது தான் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 Nepal Flood

நேபாளில் வெள்ளம் வந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சி காரணம்.! மீண்டும் வெள்ளம் வர வாய்ப்பு இருக்கா.?

மீட்கப்பட்ட 21 தமிழர்களின் பெயர்கள்:

1. சிவரஞ்சனி முத்துநாதன்

2. கற்பகம் ராஜாமோகன்

3. மாறன் கோவிந்தசாமி

4. சாந்தி மாறன்

5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்

6. நாவு கபீர்தாஸ்

7. விஜயபுவனேஷ்வரி விஸ்வநாதன்

8. மைதிலி முத்துக்குமரேசன்

9. தியாகராஜன ரத்தினம்

10. கிருபாகரி பாலசுப்பிரமணியம்

11. வள்ளியநாயகி சிவகுமார்

12. சத்தியா ஜெயராமன்

13. திருமாவளவன் கோவிந்தராசு

14. கனகசபை நடேசபிள்ளை

15. ராதை கனகசபை

16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்

17. பூங்குழலி பொன்னம்பலம்

18. பழனியப்பன் மாணிக்கபெருமாள்

19. கலைமதி பழனியப்பன்

20. ரகுநாதன் முனிராஜ்

21. கனகசபை நடேச பிள்ளை

இவர்கள் தவிர திருச்சியைச் சேர்ந்த 3 பேர் நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை சீற்றத்தைத் தடுப்பது இயலாத காரியம் எனினும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கா இயற்கையை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம் என இந்த சம்பவத்தின் மூலம் உலக நாடுகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online