Dailyhunt
#BREAKING : நீட் தேர்வு ரத்து என்னாச்சு?கரும்பு நெல் ஆதார விலை என்னாச்சு ?..முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி..!

#BREAKING : நீட் தேர்வு ரத்து என்னாச்சு?கரும்பு நெல் ஆதார விலை என்னாச்சு ?..முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி..!

Kalki Online 2 weeks ago

ன்று தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் உள்பட எட்டு தொகுதிகளின் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

திருச்சி மரக்கடை பகுதியில் இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பின் தனது உரையை தொடங்கினார்.

நெஞ்சில் குடியிருக்கும் திருச்சி நகர மக்களுக்கு விஜய் வணக்கங்களுடன் எனத் துவங்கி .முதலில் எரிவாயு சிலிண்டர் பிரச்சினையை கையில் எடுத்தார் விஜய்.

சிலிண்டர் பிரச்சனை தீர்ந்து விட்டதா என கூட்டத்தினரை பார்த்து விஜய் கேள்வி ..சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைகள் உணவகங்கள் மூடப்பட்டு மக்களுக்கு பாதிப்புகள். ஏன் மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை ஆக இருக்கவில்லை? சிலிண்டர் பிரச்சினைக்கு முதல்வர் ஏன் டெல்லி செல்லவில்லை? சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கும் நமக்கும் பிரச்சனை இல்லை என்று இருக்கிறாரா மு க ஸ்டாலின்?

கேஸ் மானியமாக நூறு ரூபாய் தருவோம், ரேஷனில் உளுந்து ஒரு கிலோ அதிகமாக தருவோம், நீட்டை ரத்து செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே என்ன ஆச்சு ? எல்லாம் வெறும் அறிவிப்புகள். அவர் போல பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம் . மக்களின் தேவைகள் என்ன என்று தெரிந்து வாக்குறுதிகள் அளிப்போம்.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டமாக இலவசமாக ஆறு சிலிண்டர்கள் , பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை , திருமணம் ஆகி செல்லும் இளம் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் பட்டுச்சேலை , 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் , பெண்கள் தமிழகத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்ல வசதியாக இலவச பேருந்துகள் என மக்களுக்கு தேவைப்படும் திட்டங்கள் மட்டுமே எங்களிடம்.

கல்வி ,வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும். அரசுப் பள்ளிகளில் வசதிகள் செய்து தரப்படும். விளாத்திகுளம் மாணவி டாய்லெட் இல்லாததால் தான் காட்டுக்குள் சென்றார் கொலை செய்யப்பட்டார். அப்படி ஒரு நிலை வரக்கூடாது.

நகராட்சி நிர்வாக துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு மோசடி. நகராட்சி நிர்வாகத் துறையில் ரூபாய் ஆயிரம் கோடி ஊழல். திமுக ஆட்சியில் ஒரு யூஸ் ம் இல்லை. நூறு சதவீதம் விஜயை நம்பலாம். நீங்கள் நம்புகிறீர்கள் என்று தெரியும் .அதனால் தான் எனது சொந்த பந்தங்களாக உங்களிடம் எனக்கு வாய்ப்பு தாருங்கள். எனக் கேட்கிறேன்.

கரூர் சம்பவம் சூழ்ச்சி என்றால் கடைசி படமான ஜனநாயகனும் சூழ்ச்சி இதையெல்லாம் முறியடித்து விசில் ஒலிக்க வேண்டும். திமுக பாதி கதர் கூட்டணி ,பாதி காவி கூட்டணி . ஆகவே நீங்கள் திமுகவையும் நம்ப வேண்டாம் பாஜகவையும் நம்ப வேண்டாம் .திமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் இரண்டையும் நம்பாதீர்கள்

ஏப்ரல் 23 அன்று நடக்கும் தேர்தல் ஒரு தலைமுறைக்கான தேர்தல் .உங்களுக்கான தேர்தல்.. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா ?

"நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு" என்ற பாடல் பாடி ரசிகர்களின் விசில் சத்தத்துடன் தனது உரையை முடித்தார் விஜய்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online