Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்து- உயர்நீதிமன்றம்..!!

#BREAKING: ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்து- உயர்நீதிமன்றம்..!!

Kalki Online 53 mins ago

துராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கு தடைக்கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எம்எல்ஏவாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்தது வாக்களித்தவர்களை அவமதிப்பதாகும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது கேலிக்கூத்து. குறுகிய காலத்தில் ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜினாமா செய்தவர்களே இடைத்தேர்தல் செலவுகளுக்கு பொறுப்பாகும் வகையில் நடைமுறைகளை வகுக்க வேண்டும்.

ஒரு கட்சியில் வென்றவர்கள் ராஜினாமா செய்து விட்டு மற்றொரு கட்சியில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மக்கள் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்களை தடுக்க தற்போதைய சூழலில் வழிகாட்டுதல்கள் இல்லை.

சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online