Dailyhunt
#BREAKING: சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

#BREAKING: சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

Kalki Online 1 month ago

மிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வருகின்ற மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலின் போது, அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மட்டுமின்றி கேரளம், அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் தேர்தல் நாள் அன்று விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளம் மற்றும் அசாம் ஆகிய 2 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மேற்கு வக்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் எந்தெந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறதோ, அந்தத் தொகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும்.

இனி சாலை விபத்து நிவாரணம் பெற அலைய வேண்டாம்.! புதிய போர்ட்டல் அறிமுகம்!

தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

பொதுவாக தேர்தல் நாளொன்று பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை சாத்தியப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இம்முறை தமிழ்நாட்டில் புதிய வாக்காளர்கள் 12 லட்சத்திற்கும் மேல் அதிகமாக இருப்பதால், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online