Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டாக்டரிடம் போவதற்கு முன் இதைச் செய்தீர்களா? மருந்தில்லா மருத்துவத்தின் ரகசியம்!

டாக்டரிடம் போவதற்கு முன் இதைச் செய்தீர்களா? மருந்தில்லா மருத்துவத்தின் ரகசியம்!

Kalki Online 0 months ago
 tiredness headache

1. சோர்வு நீங்க

மிகவும் சோர்வாக இருக்கிறதா? இதற்கு இரும்புச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சர்க்கரை அளவின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம்.

தீர்வு: பேரீச்சை, வெல்லம், முருங்கைக்கீரை ஆகிய மூன்றும் இரும்புச்சத்தைத் தரும். வெறும் வயிற்றில் பேரீச்சை சாப்பிட்டு வர, இரண்டு வாரத்தில் மாற்றம் தெரியும். காலையில் எழுந்ததும் 2 கிளாஸ் தண்ணீர் குடித்தால் நீர்ச்சத்து சீராகும்.

2. அடிக்கடி தலைவலி

மணிக்கணக்கில் கணினி அல்லது அலைபேசித் திரையைப் பார்ப்பது மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் தலைவலிக்கு முக்கியக் காரணம். 80% தலைவலி நீர்ச்சத்து குறைபாட்டாலும், மீதி 20% மக்னீசியம் குறைபாட்டாலும் ஏற்படுகிறது.

தீர்வு: தலைவலி வந்ததும் 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்; 20 நிமிடம் கழித்து தலைவலி குறையும். மக்னீசியம் நிறைந்த பாதாம், கீரை, டார்க் சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடுவதும் பலன் தரும்.

 insomnia indigestion hairfall

3. தூக்கமின்மை

மன அழுத்தம் தரும் 'கார்டிசோல்' (Stress Hormone) அதிகரிப்பதாலும், திரையில் இருந்து வரும் வெளிச்சம் 'மெலடோனின்' ஹார்மோனைத் தடுப்பதாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

தீர்வு: வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்துப் பருகலாம். வாழைப்பழத்தில் உள்ள 'ட்ரிப்டோபேன்' அமினோ அமிலம் தூக்கத்தை வரவழைக்கும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

4. வயிறு எரிச்சல் மற்றும் அஜீரணம்

காரமான மற்றும் மசாலா உணவுகள் அல்லது குடல் பாக்டீரியாக்களின் சமநிலையின்மையால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது.

தீர்வு: சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும். உணவிற்குப் பிறகு மோர் குடிக்கவும். இரவு உணவிற்குப் பின் சிறிது தூரம் நடப்பதும், வெந்தயம் ஊறவைத்த நீரைப் பருகுவதும் நல்லது.

5. முடி உதிர்வு

பயோட்டின், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி குறைபாடே இதற்கு முக்கியக் காரணம்.

தீர்வு: முட்டையில் புரதமும், நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும் அதிகம். எள்ளில் துத்தநாகமும் இரும்பும் உள்ளன. தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்துச் சூடு செய்து மசாஜ் செய்வது முடியை வலுப்படுத்தும்.

 anger knee pain memory loss

6. கோபம் மற்றும் எரிச்சல்

சர்க்கரை குறைபாடு மற்றும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது செரடோனின் சுரப்பு குறைகிறது. இதனால் மன எரிச்சல் ஏற்படும்.

தீர்வு: டார்க் சாக்லேட் அல்லது தயிர் சேர்த்துக்கொள்ளவும் (தயிர் குடலைச் சுத்தமாக்கும்). வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 மகிழ்ச்சி ஹார்மோனைச் சுரக்கச் செய்யும். நீண்ட நேரம் பசியோடு இருக்க வேண்டாம்.

7. மூட்டு வலி

வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு மற்றும் உடல் எடை அதிகரிப்பு இதற்குத் தலைகாய காரணங்கள்.

தீர்வு: மஞ்சள், இஞ்சி, மிளகு சேர்த்த 'கோல்டன் மில்க்' (மஞ்சள் பால்) அருந்தவும். ஒமேகா-3 நிறைந்த வால்நட், ஆளிவிதை ஆகியவற்றைச் சாப்பிடவும். தினமும் 20 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதும், வாரத்தில் மூன்று முறை முருங்கை சூப் குடிப்பதும் அவசியம்.

8. ஞாபகசக்தி குறைவு

தூக்கமின்மை, ஒமேகா-3 குறைபாடு அல்லது அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் இது ஏற்படலாம்.

தீர்வு: வால்நட், நீலத் திராட்சை மற்றும் மஞ்சள் பால் சேர்த்துக்கொள்ளவும். தியானம் செய்வது மூளையை ஒருநிலைப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கும்.

பெண்களே உஷார்! அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும் 'புடவை புற்றுநோய்'!  weight loss skin problems  walking

9. உடல் எடை குறைய

ஹார்மோன் சமச்சீரின்மை மற்றும் தைராய்டு பிரச்சனைகள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம்.

தீர்வு: காலையில் எலுமிச்சை, தேன், இஞ்சி கலந்த வெதுவெதுப்பான நீர் அருந்தவும். கிரீன் டீ மற்றும் உணவிற்கு முன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீரைப் பருகுவது எடையைக் குறைக்க உதவும்.

10. தோல் பொலிவிழப்பு

வறண்ட சருமம், முகப்பரு மற்றும் கொலாஜன் குறைபாடு இதற்குக் காரணம்.

தீர்வு: ஒரு நெல்லிக்காயில் 20 ஆரஞ்சு பழங்களுக்கு இணையான வைட்டமின் சி உள்ளது. இளநீர் மற்றும் வெள்ளரிச் சாறு பருகவும். மைதா, இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும்.

11. நடந்தால் மூச்சு வாங்குதல்

வைட்டமின் சி, டி மற்றும் துத்தநாகக் குறைபாடு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தீர்வு: துளசி, இஞ்சி, மிளகு, தேன் சேர்த்துக் கஷாயம் போலப் பருகவும். நெல்லிக்காய், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்து, போதுமான சூரிய ஒளி மற்றும் நீர்ச்சத்து கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online