Dailyhunt
டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காதீங்க! உங்கள் உடலை 'ரீசெட்' செய்ய எளிய டிப்ஸ்!

டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காதீங்க! உங்கள் உடலை 'ரீசெட்' செய்ய எளிய டிப்ஸ்!

Kalki Online 2 weeks ago

ண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டங்களும், உற்சாகமும் தான். ஆனால், அதே வேளையில் தாமதமான தூக்கம், அதிக இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் பயணங்கள் நம் அன்றாட ஆரோக்கியமான நடைமுறையை முற்றிலும் மாற்றிவிடுகின்றன.

இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க பலரும் டிடாக்ஸ் மற்றும் டயட் என்ற பெயரில் பட்டினி கிடப்பதையும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பதில், எளிய 3 நாள் மறுதொடக்கத்தின் மூலம் உங்கள் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம். அது எப்படி? என இந்தப் பதிவில் காணலாம்.

1. நீரேற்றம்:

உடலைச் சீரமைப்பதில் முதல் படி நீரேற்றம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது செரிமானம், கல்லீரல் செயல்பாடு மற்றும் குடல் இயக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

2. உணவை எளிமைப்படுத்துதல்:

உணவைக் குறைப்பதில் கவனம் செலுத்தாமல், உணவின் கட்டமைப்பில் கவனம் செலுத்துங்கள். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பது உங்கள் பசியைத் தூண்டி, மீண்டும் தேவையற்ற உணவுகளை உண்ணத் தூண்டும். எனவே, வீட்டிலேயே சமைத்த எளிமையான சரிவிகித உணவை உட்கொள்ளுங்கள்.

3. உணவு உண்ணும் வரிசையை மாற்றுங்கள்:

எதைச் சாப்பிடுகிறோம் என்பதை விட, எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். இது உங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, பசியைக் குறைக்கும்.

  • முதலில் சமைக்காத காய்கறிகள் (சாலட், வெள்ளரி, கேரட்) அல்லது லேசாக வேகவைத்த காய்கறிகளுடன் தொடங்குங்கள்.

  • இரண்டாவதாக பருப்பு வகைகள், பன்னீர், முட்டை அல்லது மீன் போன்ற புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

  • கடைசியாக சாதம், சப்பாத்தி அல்லது சிறுதானியங்களை மிகக் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.

இந்த வரிசை செரிமானத்தை எளிதாக்கி, உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிகரெட்டை விட ஆபத்தானதா 'சிட்டிங்'? - உங்கள் ஆயுளைக் குறைக்கும் 8 ரகசிய வில்லன்கள்!

4. உடற்பயிற்சி:

அதிகம் சாப்பிட்டுவிட்டோம் என்பதற்காக, அதைக் குறைக்க ஜிம்மில் மணிக்கணக்கில் கடினமாக உழைப்பது நரம்பு மண்டலத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

அதற்குப் பதில், மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது உங்கள் குளுக்கோஸ் அளவைச் சீராக்கி, செரிமானத்திற்கு உதவும்.

5. தூக்கம்:

உணவைச் சீரமைப்பவர்கள் தூக்கத்தைச் சீரமைக்கத் தவறிவிடுகிறார்கள். தூக்கம் குறைந்தால் பசி உணர்வு அதிகரிக்கும் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.

தூங்கும் நேரத்தை நிலையாக வைத்துக்கொள்ளுங்கள். உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே மொபைல் போன், டிவி போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

காலையில் 5 முதல் 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீரமைக்க உதவும்.

சாப்பிடும் உணவில் முடியா? அந்த முடி வயிற்றுக்குள் போனால்...?

சூரிய மறைவிற்குப் பிறகு ஒரு மணிநேரத்திற்குள் இரவு உணவை முடிப்பது சிறந்தது. இது உங்கள் உடல் செரிமானத்திற்காக உழைக்காமல், தன்னைத்தானே பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட உதவும்.

உடலைச் சீரமைப்பது என்பது உடலுக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு 'அன்பான கவனிப்பு'. கடுமையான மாற்றங்களுக்குப் பதில், 3 நாள் இந்த எளிய மாற்றங்கள் உடலை மீண்டும் புத்துணர்ச்சியுடன் இயங்க வைக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online