Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டயர்களில் உள்ள எண்களின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

டயர்களில் உள்ள எண்களின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

Kalki Online 5 months ago

வாகனங்களை ஓட்டுவதில் நமக்கு இருக்கும் ஆர்வம், அவற்றை பராமரிப்பதில் பலருக்கும் இருப்பதில்லை. குறிப்பாக, பாதுகாப்பிற்கு மிக முக்கியமான காரணியாக விளங்கும் டயர்களைப் பற்றி நாம் பெரிதாகக் கவலைப் படுவதில்லை.

டயரின் பக்கவாட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஏதோ சீரியல் நம்பர் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் தவறு. உங்கள் வாகனத்தின் வேகம், தாங்கும் எடை மற்றும் அதன் ஆயுட்காலம் போன்ற அத்தனை ரகசியங்களும் அந்த எண்களுக்குள் தான் ஒளிந்துள்ளன.

உதாரணத்திற்கு, ஒரு டயரில் 205/55 R16 91V என்று எழுதப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இதன் ஒவ்வொரு பகுதியும் ஒரு முக்கியமான தகவலைக் கூறுகிறது.

முதல் எண்ணான 205 என்பது டயரின் அகலத்தைக் குறிக்கிறது. இது மில்லிமீட்டரில் அளவிடப்படுகிறது. அதாவது, டயரின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரையிலான அகலம் 205 மி.மீ ஆகும். இது வாகனத்தின் பிடிமானத்திற்கு மிக அவசியம்.

அடுத்ததாக வரும் 55 என்பது ஒரு சதவீதமாகும். இது டயரின் அகலத்திற்கும் அதன் உயரத்திற்கும் உள்ள விகிதத்தைக் குறிக்கிறது. இங்கே 55 என்பது, டயரின் அகலத்தில் (205 மி.மீ) 55% அதன் உயரம் என்பதாகும். இந்த எண் குறைவாக இருந்தால், டயர் தட்டையாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருக்கும்.

இதற்கு அடுத்து வரும் R என்ற எழுத்து 'Radial' என்பதைக் குறிக்கிறது. இன்று சந்தையில் உள்ள பெரும்பாலான கார்களில் ரேடியல் டயர்கள்தான் பயன்படுத்தப் படுகின்றன. இவை நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு உதவுபவை.

உங்களுக்குத் தெரியுமா? உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி நியூட்டனின் ஆன்மீகப் பார்வை!

அடுத்ததாக வரும் 16 என்ற எண், அந்த டயர் எந்த அளவுள்ள சக்கரத்தில் பொருந்தும் என்பதைக் குறிக்கிறது. இது அங்குலங்களில் அளவிடப்படுகிறது. 16 என்றால், அது 16 இன்ச் சக்கரத்திற்கான டயர் என்று அர்த்தம்.

டயரின் இறுதியில் உள்ள 91V என்பதுதான் மிக முக்கியமானது.

இதில் உள்ள 91 என்பது அந்த டயர் அதிகபட்சமாக எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதைக் குறிக்கிறது. '91' என்ற குறியீடு சுமார் 615 கிலோ எடையைத் தாங்கும் திறன் கொண்டது. கடைசியாக உள்ள V என்பது அந்த டயர் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய அதிகபட்ச வேகத்தைக் குறிக்கிறது. 'V' குறியீடு இருந்தால், அந்த டயர் மணிக்கு 240 கி.மீ வேகம் வரை தாங்கும் திறன்கொண்டது என்று பொருள்.

இதுபோல, 'S' என்றால் 180 கி.மீ வேகம் வரையும், 'T' என்றால் 190 கி.மீ வேகம் வரையும், 'U' என்றால் 200 கி.மீ வேகம் வரையும், 'H' என்றால் 210 கி.மீ வேகம் வரையும், 'W' என்றால் 270 கி.மீ வேகம் வரையும் தாங்கும் திறன் கொண்டது.

டயர் உருவான தேதியை அறிவது எப்படி?

டயர்களில் DOT (Department of Transportation) என்று ஆரம்பித்து சில எண்கள் இருக்கும். அதன் இறுதியில் உள்ள நான்கு எண்கள் மிக முக்கியமானவை. உதாரணத்திற்கு 1224 என்று இருந்தால்:

கம்மி விலையில் ஒரு கேமிங் மான்ஸ்டர்.. இந்த இயர்பட்ஸ் வாங்குனா வேற லெவல் என்ஜாய்மென்ட் கன்பார்ம்.

முதல் இரண்டு எண்கள் (12), அந்த ஆண்டில் எத்தனையாவது வாரம் என்பதையும், கடைசி இரண்டு எண்கள் (24), அந்த ஆண்டு (2024) என்பதையும், அதாவது, அந்த டயர் 2024-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தயாரிக்கப்பட்டது. பழைய டயர்களை வாங்குவதைத் தவிர்க்க இந்த ரகசியம் உங்களுக்கு உதவும்.

டயர் என்பது வாகனத்தின் பாதுகாப்புக் கவசம். அடுத்த முறை உங்கள் காருக்கோ அல்லது பைக்கிற்கோ டயர் மாற்றச் செல்லும் போது, இந்த எண்களைச் சரிபார்க்க மறக்காதீர்கள். சரியான அளவு மற்றும் வேகக் குறியீடு கொண்ட டயர்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online