Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி TNPSC உள்ளிட்ட எல்லா தேர்வுகளுக்கும் ஒரே ஆப்பில்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி TNPSC உள்ளிட்ட எல்லா தேர்வுகளுக்கும் ஒரே ஆப்பில்..!

Kalki Online 3 months ago

மிழ்நாடு அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (USRB), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தேர்வு முகமைகள் மூலம் செய்யப்படும் 'பணியாளர்கள் தேர்வுகள்' பிற அரசுத் தேர்வுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற 'தேர்வுக்களம்' (Thervukalam) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது அனைத்துத் தேர்வு அப்டேட்களையும் ஒரே இடத்தில் வழங்கும், வேலை தேடும் பட்டதாரிகளுக்கான ஒரு முக்கிய தளமாகும். அரசு வேலைக்குத் தயாராகுபவர்களுக்குத் தேவையான பயிற்சிப் பொருட்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்தச் செயலி மூலம் வழங்கப்படும். தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள 'தேர்வுக்களம்' (thervukalam app)எனும் ஒருங்கிணைந்த செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13-ம்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த 'தேர்வுக்களம்' செயலி மூலம் அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், தேர்வுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல், தேர்வு முடிவுகள் அறிதல், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் என அரசு நடத்தும் அனைத்து தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன், குறித்த நேரத்தில், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது முதல், தேர்வு முடிவுகள் வெளியாவது வரை உங்க கைபேசியில் உடனடியாக அறிவிக்கப்படும் வண்ணம் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டால் உடனே ஆப் மூலம் உங்களுக்கு 'அலர்ட்' வரும். உடனே ஆப் மூலமாகவே நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதனால் எந்தத் தகவலும் தவறவிடப்படாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் தேர்வுக்கான தயாரிப்பை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியும். தேர்வர்கள் இதுபோன்ற தகவல்களுக்கு பல்வேறு செயலிகளை இனி பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த ஒரு செயலியிலேயே அனைத்து தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் இந்த ஆப்பில் தமிழக அரசுப் பணிகளுக்கான அட்டேட் மட்டுமின்றி, மத்திய அரசின் (SSC, RRB, UPSC) முக்கியத் தேர்வுகள் குறித்த விவரங்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசு வேலைக்காக தேர்வு எழுதுபவர்கள் அதுகுறித்து அறிந்து கொள்ள மத்திய மற்றும் மாநில அரசு வெப்சைட்டுகளுக்கு தனித்தனியாக அலையத் தேவையில்லை.

அந்த வகையில், ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பெறும் வசதியை 'தேர்வுக்களம்' செயலி வழங்குகிறது. ஆர்வலர்கள் Play Store அல்லது App Store மூலம் அரசின் அதிகாரப்பூர்வமான 'தேர்வுக்களம் செயலி'யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்ததும் நோட்டிபிகேஷனை 'On' செய்து வைத்துகொள்ளுங்கள். அப்போது தான் பணியிடங்கள், தேர்வு போன்ற அரசின் வேலை தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு உடனுக்குடன் அட்டேட்டாவதுடன், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது உங்களுக்கு மிக எளிதான நடைமுறையாகிவிடும்.

2026-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு..!

அரசு வேலை என்பது பலரோட கனவாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பாதையை எளிமையாக்க தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்தத் தொழில்நுட்ப முயற்சி வேலையில்லா பட்டதாரிகளுக்கு கோல்டன் டிக்கெட் என்று தான் சொல்ல வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online