Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டிகிரி போதும்... ஆரம்பமே 35,000 சம்பளம்.. இந்தியன் ரெயில்வேயில் 4098 காலிப்பணியிடங்கள்..!!

டிகிரி போதும்... ஆரம்பமே 35,000 சம்பளம்.. இந்தியன் ரெயில்வேயில் 4098 காலிப்பணியிடங்கள்..!!

Kalki Online 1 month ago

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரெயில்வே. மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், நிலையான வேலை மற்றும் பல்வேறு சலுகை போன்றவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாகயே ரெயில்வே வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் பல ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் இந்தியன் ரெயில்வேயில் (ரயில்வே வேலை) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு (Indian Railways job) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெயில்வே தேர்வு வாரியம் (RRB) இந்திய ரெயில்வேயில் (Indian railway) இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர், ஜூனியர் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் வொர்க்‌ஷாப், டிரக் மெஷின், டீசல் மெக்கானிக்கல், வெல்டர், சிவில், மெக்கானிக்கல், வெல்டர், டீசல் எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சூப்பிரண்டண்ட், கெமிக்கல் மற்றும் உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி என்ன, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம் வாங்க.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி., அதாவது, பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ, பிஎஸ்சி பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 2027 ஜனவரி 1-ம்தேதி படி 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு.

2,670 பேருக்கு வேலைவாய்ப்பு..!நெல்லையில் ₹15,037 கோடியில் அமைகிறது மெகா பேட்டரி ஆலை..!!

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.

சம்பளம் : மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 6 படி மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும்.

 Railway Jobs |ரயில்வே வேலை

தேர்வு முறை: இரண்டு கட்ட கணினி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள்/EBC பிரிவினருக்கு ரூ. 250 தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு எழுதிய பிறகு இவர்களுக்கு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி : வரும் ஆகஸ்ட் 14-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 13-ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம் : இது புது வகை மோசடி - இந்தியன் ரெயில்வே..!

ரெயில்வேயில் வேலை எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்த வாய்ப்பு முக்கிய அறிவிப்பாக உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online