Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எலக்ட்ரீசியன் தேவையில்லை! வீட்டிலேயே மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வது எப்படி?

எலக்ட்ரீசியன் தேவையில்லை! வீட்டிலேயே மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்கச் செய்வது எப்படி?

Kalki Online 5 months ago

கோடை காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் பகல் முழுவதும் மின் கட்டண அதிகரிப்பு காரணமாக ஏசியை ஓடவைக்க முடியாது.

இதற்கு மாற்றான மின்விசிறி மெதுவாக சுழல்வதால் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. காற்று குறைவாக வந்தால் குளிர்ச்சி ஏற்படாததோடு மின்சாரமும் வீணாகும். அந்த வகையில் வீட்டிலேயே மின்விசிறியை வேகமாக சுழல வைக்க செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

முழு சுத்தம்

மின்விசிறியில் உள்ள பிளேடுகள் மற்றும் மோட்டாரில் படிந்திருக்கும் தூசிகள் காரணமாக மின்விசிறி மெதுவாக இயங்கும். இதற்கு மின்சாரத்தை அணைத்துவிட்டு மின்விசிறியின் பிளேடுகள், கிரில், மோட்டார் பகுதி ஆகியவற்றில் உள்ள தூசி மற்றும் அழுக்கு ஆகியவற்றை ஈரமான துணி அல்லது பிரஷ் கொண்டு துடைக்க வேண்டும். மேலும் கிரில்லை திறந்து உள்ளே இருக்கும் தூசியை அகற்றி மின்விசிறியை இயக்க முன்பைவிட வேகமாக சழலும்.

மின் தேக்கி சரிபார்ப்பு

மின் தேக்கி பழுதாக இருந்தாலும் மின்விசிறி மெதுவாக சுழலும். இதற்கு மின்விசிறியில் சிறிய உருளை வடிவில் இருக்கும் மின் தேக்கியின் மதிப்பிற்கு ஏற்ப (உதாரணமாக 2.5 μF அல்லது 3.5 μF) புதிய மின் தேக்கியை வாங்கி வந்து மின்சாரத்தை அணைத்துவிட்டு பழையதை எடுத்து புதிதாக பொருத்தினால் மின்விசிறி வேகமாக சுழல்வதை காணலாம். இதனை வீட்டிலேயே எளிதாக எலக்ட்ரீசியன் உதவியில்லாமல் மாற்றலாம்.

வயரிங் இணைப்பு சரிபார்ப்பு

மின்விசிறியில் உள்ள தளர்ந்த இணைப்புகளும், துருப்பிடித்த வயர்களும், பழுதான ரெகுலேட்டர்களும் மின்விசிறி மெதுவாக சுழல மற்றும் ஒரு காரணமாகும். இதற்கு தீர்வு காண மின்சாரத்தை அணைத்துவிட்டு எல்லா இணைப்புகளையும் சரிபார்த்த பிறகு அவசியமிருந்தால் ரெகுலேட்டரையும் மாற்றினால் மின்விசிறி வேகமாக சுழலும்.

மின்னழுத்தம்

கோடை காலம் என்பதால் அதிக பயன்பாடு காரணமாக அடிக்கடி மின்னழுத்தம் ஏற்படுவது இயல்பு அத்தகைய நேரங்களில் மின்விசிறி மெதுவாக சுழலும். அதற்கு நல்ல தரமான சீராக்கி அல்லது நிலைப்படுத்தியை பயன் படுத்தினால் மின்விசிறி வேகமாக சுழலுவதை காணலாம்.

ADHD உள்ள குழந்தைகளுக்கு மாத்திரை வேண்டாம்... இந்த ஒரு பயிற்சி செய்தலே மூளை கம்ப்யூட்டர் மாதிரி வேலை செய்யும்!

மின்விசிறி பராமரிப்பு

ஒவ்வொரு மின்விசிறியையும் வருடத்திற்கு இரண்டு முறை சர்வீஸ் செய்வதோடு அதிகமாக சுழல பிளேடுகளின் கோணத்தை சரியாக அமைக்க வேண்டும். மேலும் மின்சாரத்தை சேமிக்க புதிய மின்விசிறி வாங்கும்போது BLDC அல்லது 5-நட்சத்திர மாடல்களை தேர்வு செய்வது நல்லது.

மேற்கூறிய முறைகளை கையாண்டும் மின்விசிறி மெதுவாக சுழன்றால் எலக்ட்ரீசியனை வரவழைப்பது நல்லது. அல்லது புதிய மின்விசிறியை வாங்குவது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online