Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எல்லாமே சலித்து விடுகிறதா... இதோ உங்களை ஆட்டிப்படைக்கும் உண்மை!

எல்லாமே சலித்து விடுகிறதா... இதோ உங்களை ஆட்டிப்படைக்கும் உண்மை!

Kalki Online 1 month ago

ற்போதைய காலகட்டத்தில் நமக்கு எல்லாமே மிக சீக்கிரமாகவே சலித்து விடுகிறது. படிப்பு, வேலை போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் நாம் முன்பு விரும்பிப் பார்த்த சினிமாக்கள் கூட இப்போது சுவாரஸ்யமாக இல்லை.

இதற்குக் காரணம் நமது சோம்பேறித்தனம் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கும் பொறுமை நம்மிடம் இருந்தது.

இப்போது யூடியூப், டிக்டாக் போன்ற செயலிகளில் 20 விநாடி வீடியோ பார்த்தால் கூட சலிப்பு தட்டுகிறது. ஒரு வீடியோ ஓடும்போதே கீழே விளையாட்டு வீடியோ ஓடினால் தான் நம்மால் பார்க்க முடிகிறது. நமது மூளை அதிகப்படியான சுவாரஸ்யங்களுக்குப் பழகிவிட்டது. இதை ஒரு காரமான உணவோடு எளிதாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொடர்ந்து காரமான உணவைச் சாப்பிடும் போது நாக்கு அதற்குப் பழகிவிடுவது இயற்கையே.

சோம்பேறித்தனம் காரணமல்ல!

காலப்போக்கில் அந்த காரம் நமக்குப் பத்தாது என்று தோன்றும். உடனே நாம் இன்னும் கொஞ்சம் காரத்தை அதிகப்படுத்துவோம். உணவு காரம் குறைந்துவிடவில்லை நாக்கு மாறிவிட்டது. அதுபோலவே நமது மூளையும் தொடர்ச்சியான சுவாரஸ்யங்களுக்கு அடிமையாகிவிட்டது. இது நமது உடலில் சுரக்கும் இயல்பான டோபமைன் அளவு எப்படி மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. நமக்கு ஊக்கம் குறைந்துவிட்டது என்று பலரும் தங்களைத் தாங்களே குறை கூறிக் கொள்வது முற்றிலும் தவறான புரிதலாகும்.

 Overcoming boredom டோபமைன் அளவு

எங்கும் எதிலும் பொழுதுபோக்கு!

நாம் வரிசையில் நின்றாலும் சரி சாப்பிட்டாலும் சரி கையில் ஒரு மொபைல் போன் இல்லாமல் இருப்பதில்லை. எந்நேரமும் காதில் பாட்காஸ்ட் அல்லது பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேலை செய்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு வகையில் நம்மை நாமே மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறோம். இதுவே ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இதனால் சாதாரண வேலைகளைச் செய்யும்போது மூளை அதனை மற்ற பொழுதுபோக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

சமையலறை அழுக்கா? உங்கள் மன அழுத்தத்திற்கு இதுதான் முக்கிய காரணம்!

உடனே அந்தச் சாதாரண வேலைகள் மிகவும் மந்தமானதாக நமக்குத் தோன்ற ஆரம்பிக்கின்றன. காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டுச் சாதாரண உணவைச் சாப்பிட்டால் எப்படிச் சுவைக்காதோ அதேபோலவே சாதாரண வேலைகளும் நமக்குச் சுவாரஸ்யமற்றுப் போய்விடுகின்றன.

ஒரு வேலை சலிப்பைத் தரும்போது நாம் உடனே மொபைலை எடுக்கிறோம். மூளைக்குத் தேவையான சுவாரஸ்யம் மீண்டும் கிடைக்கிறது. இதனால் நமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று அதிகரிக்கிறது. மீண்டும் சாதாரண உலகத்திற்குத் திரும்பும்போது அது சலிப்பைத் தருகிறது.

முடிவில்லாத வளையம்!

இப்படி ஒரு மோசமான சுழற்சியில் நாம் மாட்டிக் கொள்கிறோம். உண்மையில் நமது மூளை பழுதாகிவிடவில்லை. அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. இந்த உலகத்தில் நம் கவனத்தை ஈர்க்கப் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதற்கேற்றவாறு நமது மூளையும் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. இந்த டோபமைன் அளவு அதிகரிப்பே நமது தற்போதைய மனநிலைக்கு முழுமையான காரணமாக அமைகிறது. இதை உணர்ந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.

சோஷியல் மீடியா நிறுவனங்கள் உங்க மனச எப்படி ஹேக் பண்றாங்க தெரியுமா?

வெறுமையை பழகுங்கள்!

மூளை ஒரு விஷயத்திற்குப் பழகுகிறது என்றால் அதை மீண்டும் பழைய நிலைக்கும் நிச்சயம் கொண்டு வர முடியும். நாம் கடைசியாக எப்போது மொபைல் போன் பாட்டு வீடியோ எதுவும் இல்லாமல் சும்மா இருந்தோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி இருப்பதை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். சலிப்பு அல்லது வெறுமை என்பது ஒரு மோசமான உணர்வு கிடையாது. அதிலிருந்து தப்பிக்க நினைப்பதால்தான் நமக்கு எல்லாமே சலித்து விடுகிறது.

எளிய விஷயங்களை ரசிக்க மூளைக்குப் பழகிக் கொடுத்தால் வாழ்க்கை மீண்டும் சுவாரஸ்யமாக மாறும். சற்று நேரம் சும்மா இருப்பதும் நமது மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும் அருமையான பயிற்சி. இந்த டிஜிட்டல் மோகத்திலிருந்து வெளிவந்து இயல்பான வாழ்க்கையை வாழப் பழகுங்கள். சிறிய விஷயங்களிலும் சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க முயலுங்கள். அதுவே உங்களை எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் மிகச் சிறந்த தந்திரமாக அமையும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online