Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்னது கருப்பு நிறத்தில் பாலா?

என்னது கருப்பு நிறத்தில் பாலா?

Kalki Online 1 year ago

யிர், பன்னீர், பாலாடை என அனைத்தும் பால் மூலம் கிடைக்கபெறுபவை தான். அப்படி இந்த அனைத்து பொருட்களுமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

ஏனென்றால் பால் வெள்ளை நிறத்திலானது. பசு, எருமை, ஒட்டகம், ஆடு, கழுதை ஏன் ஒரு மனித தாய்க்கும் பால் வெள்ளை நிறத்தில் தான் சுரக்கும். பாலில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதை பருகுவதன் மூலம் எலும்பு, பற்கள் அனைத்தும் வலுபெறும். கால்சியம் சத்து இல்லையென்றால் எலும்பு தேய்மானம் அடைந்துவிடும்.

இப்படி பல நன்மைகளை கொண்ட பால் கருமை நிறம் என்று நினைத்து பார்க்க முடிகிறதா? இந்த உலகில் ஒரு விலங்கு கருமை நிறத்திலான பாலை கொடுக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்ன விலங்கு, ஏன் அதன் பால் கருப்பாக உள்ளது என்று பார்க்கலாம்.

சமீபத்தில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் திணறினர். ஏனென்றால் யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், கருப்பு நிறத்தில் பால் இருக்கிறது என்று. இந்த உலகின் அனைத்து பாலூட்டிகள், விலங்குகளும் தங்களது குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன. குறிப்பாக உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. நாய், பூனை முதல் யானை வரை அனைத்தும் பால் கொடுக்கிறது. இதில் ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை ஆகிய விலங்குகளின் பாலை மட்டும் மக்களும் பயன்படுத்துகின்றனர். அப்படி ஒரு விலங்கு கொடுக்கும் பாலின் நிறம் தான் கருப்பு.

காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். இவை ஆபிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அறியப்படுகின்றன. மேலும் ஆபிரிக்க காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மாத்திரமே கொழுப்பு காணப்படுகின்றது. இதன் பால் தண்ணீர் போல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதுமட்டுமன்றி இவ்வகை கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடிவதுடன், அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்பகாலத்தை அனுபவிக்கின்றன. ஆபிரிக்க காண்டாமிருகங்கள் ஒரு தடவையில் ஒரு குட்டியை மாத்திரமே ஈனும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரிதாக யாரும் காண்டாமிருகத்தை நேரில் பார்த்திருக்க முடியாது. சிலர் உயிரியல் பூங்காவில் கூட பார்த்திருக்கலாம். அப்படி இந்த விலங்கின் பாலின் நிறம் கருப்பு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதுவரை உங்களுக்கும் தெரிந்திருக்காது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் கருப்பு நிறத்தில் பால்?

காண்டாமிருகத்தின் பாலில் க்ரீமி தன்மை குறைவாக உள்ளதாலேயே அதன் பால் கருப்பு நிறத்தில் உள்ளதாம். அதாவது அதில் கொழுப்பு தன்மை மிகவும் குறைவாகவே இருக்குமாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online