Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹைதராபாத் மீன் வைத்தியம்: ஆஸ்துமாவை விரட்டும் 170 ஆண்டுகால அதிசயம்!

ஹைதராபாத் மீன் வைத்தியம்: ஆஸ்துமாவை விரட்டும் 170 ஆண்டுகால அதிசயம்!

Kalki Online 2 months ago

தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் 17 குடும்பத்தினர் மூலம் ஆண்டு தோறும் ஜூன் ஜூலை மாதங்களில் வழங்கப்படும் 'மீன் வைத்தியம்' மருத்துவ சிகிச்சை ஆஸ்துமாவுக்கான பாரம்பரிய சிகிச்சை என அழைக்கப்படுகிறது.

1847 ஆம் ஆண்டு ஹைதராபாத்துக்கு வந்த ஒரு துறவி, மீன் மூலம் மருந்து தயாரிக்கும் ரகசியத்தை தம் முன்னோர்களுக்கு கூறியதாக சொல்லப்படுகிறது.

ஒரு வகையான முரல் மீனை ஒரு ரகசிய மஞ்சள் பேஸ்ட் மூலிகை வைத்து உயிருடன் விழுங்க சொல்கிறார்கள்.

இந்த முரல் மீன் ஐந்து முதல் ஏழு சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.

உயிருள்ள மீனை மூலிகை மருந்துடன் கலந்து விழுங்க வேண்டும்.

 Hyderabad Fish Medicine - Asthma Cure | மீன் வைத்தியம்

இதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் பலர் ஒரு முறை எடுத்துக் கொண்டாலே போதும் என்கிறார்கள். இந்த மீன் மருந்தை முழுங்கியவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது. அதற்கு பதிலாக மோர் வழங்கப்படுகிறது.

45 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட உணவு முறையை சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். இங்கு வரும் அனைவருக்கும் இந்த மீன் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இதனுடன் வெல்லம் கலந்து வழங்குகிறார்கள். இந்த சிகிச்சை முறை 170 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற இடங்களில் இருந்து இங்கு வந்து இந்த மீன் மருந்தை சாப்பிட்டு செல்கிறார்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஹைதராபாத் நாம் பள்ளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த மீன் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் இதனை நடத்தி வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா அரசு ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது . தற்போது மராட்டியம், டெல்லி, உபி போன்ற இடங்களில் இருந்தும் அதிக அளவில் ஆஸ்துமா நோயாளிகள் வருகிறார்கள்.

இந்த சமயத்தில் இங்கே டோக்கன் வழங்க 40 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இவை தவிர ரெண்டு மொபைல் கவுண்டர் இரண்டு விஐபி கவுண்டர் செயல்படும். ஒரு நாளைக்கு மட்டும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மீன்களை தெலுங்கானா அரசு மீன்வளத்துறை மூலம் இலவசமாக வழங்குகிறது.

அன்றைய தினம் நாம் பள்ளி மைதானத்திற்கு செல்ல 135 சிறப்பு பேருந்துகள் செயல்படும்.

இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு தண்ணீர் வழங்கப்படுகிறது.

முகாமில் சிகிச்சை பெற முடியாதவர்கள் பத்தினா சகோதரர்கள் வீட்டிற்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த முகாமுக்கு வரும் அனைவருக்கும் இந்த மீன் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த மூலிகை மருந்தை பத்தினா சகோதரர்கள் நிஜாம் காலத்தில் இருந்தே செய்து வருகிறார்கள்.

இந்த சிகிச்சை முறை பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகிறது. இந்த மீன் மருத்துவ சிகிச்சை ஒரு சேவை மனப்பான்மையுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் இந்த நாம் பள்ளி மைதானத்திற்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் இலவசமாக மீன் வழங்குதல் போன்றவற்றை தெலுங்கானா அரசு செய்து வருகிறது. மஞ்சள் நிற பேஸ்ட் மூலிகை மருந்தை மட்டும் பத்தினா குடும்பத்தினர் தயாரித்துக் கொண்டு வருவார்கள். அதை அந்த உயிருள்ள மீனில் வைத்து நம்மை விழுங்க சொல்வார்கள். இதுதான் சிகிச்சை முறை. அதன் பின்னர் குடிப்பதற்கு மோர் கொடுக்கிறார்கள்.

இந்த முறை ஆஸ்துமாவைக் முழுமையாக குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இதை ஆதரிக்க எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online