நாம் அன்றாட சப்பாத்தி பூரிக்கு உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா இதுபோல்தான் சமைத்து வந்துள்ளோம். ஆனால் கடைகளில் இவற்றிற்கு வெள்ளை குருமா குடுப்பது உண்டு.
அது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். கடைகளில் கிடைப்பதை போலவே நாமும் வீட்டில் வெள்ளை குருமா செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும். வெள்ளை குருமா செய்வதற்கு தக்காளி சேர்க்க வேண்டாம்.
இந்த குருமாவிற்கு காய்ந்த பட்டாணி அல்லது பச்சை பட்டாணி இரண்டுமே தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். ஹோட்டல்களில் கிடைக்கும் வெள்ளை குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
பட்டாணி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் -4
எண்ணொய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - தேவையான
முந்திரி - தேவையான அளவு
தேங்காய் - அரைமுடி
கடுகு - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
வெங்காயம் முளைக்காமல் இருக்க சிம்பிள் ட்ரிக்... இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!செய்முறை:
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பட்டாணியை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பட்டாணி நன்கு ஊறியவுடன் ஒரு குக்கரில் தேவையான அளவு நீர் ஊற்றி பட்டாணியை சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைத்து குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் நறுக்கி வைத்திருந்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து சிறிதளவு வதக்கி தேவையான அளவு நீர், ஊற்றி காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் அரை மூடி சிறியதாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளை குருமாஅதனுடன் முந்திரி, பெருஞ்சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும்.
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!வெள்ளை குருமாவிற்கு முந்திரி பருப்பு சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று இது குருமாவை கெட்டியாகவும் மற்றும் வெள்ளை குருமாவிற்கு சிறந்த நிறம் மற்றும் சிறிய அளவு ஸ்வீட் நட்ஸாக வைத்துக்கொள்ள உதவும். சுவையான கமகமக்கும் கடைகளில் கிடைக்கும் வெள்ளை குருமா வீட்டிலேயே தயார்.
இது சப்பாத்தி பூரி என அனைத்திற்கும் உகந்த சைடிஷ் ஆக இருக்கும். பூரிக்கு நாம் அன்றாட செய்யும் உருளைக்கிழங்கு மற்றும் சட்னி, சாம்பாரை காட்டிலும் இவ்வாறு ஹோட்டல்களில் கிடைப்பதைபோல செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இதில் சேர்க்கப்படும் காய்கறிகள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.
ஹோட்டல்களில் வழங்கப்படும் அதே கெட்டியான, நட்ஸ் மணக்கும் சுவையான வெள்ளை குருமாவை தக்காளி இல்லாமல் வீட்டிலேயே மிக எளிதாக செய்து பரிமாறலாம்.

