Dailyhunt
இடது புறம் ஒருசாய்த்துத் தூங்குவதால் இத்தனை நன்மைகளா?

இடது புறம் ஒருசாய்த்துத் தூங்குவதால் இத்தனை நன்மைகளா?

Kalki Online 1 year ago

தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித போஸில் தூங்குவார்கள். சிலர் மல்லாந்து படுத்து, சிலர் குப்புறப் படுத்துக்கொண்டு, சிலர் இடதுபுறம், சிலர் வலது புறம் என்று உறக்க நிலை ஆளாளுக்கு மாறுபடும்.

ஆனால், மனிதர்கள் இடது புறம் ஒருசாய்த்து தூங்குவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. செரிமான மேம்பாடு: இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். பத்து, பத்தரைக்குள் படுக்கைக்குச் செல்லும்போது உடல் ஓரளவு செரிமானத்திற்கு தயாராக இருக்கும். இடது புறம் ஒருசாய்த்து தூங்கும்போது ஈர்ப்பு விசையின் காரணமாக செரிமானப் பாதையின் வழியாக உணவை எளிதாக நகர்த்த உதவுகிறது. இந்த நிலை வயிறு மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகளையும் குறைக்கும்.

2. இதய ஆரோக்கியம்: இந்த நிலை இதயத்திற்கு சிறந்த இரத்த ஓட்டத்தைத் தருகிறது. இதயத்தின் உடற்கூறியலின்படி இடது பக்கம் தூங்குவது இதயத்தின் வேலை சுமையை குறைக்கும். இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

உங்கள் ஆசைகளுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதீர்!

3. குறட்டையைக் குறைக்கிறது: பெரும்பாலான மக்கள் குறட்டைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இடது புறம் ஒருசாய்த்துப் படுக்கும்போது சுவாசப் பாதைகளை திறந்து வைக்க உதவுவதால் குறட்டை குறையும். தூக்கத்தில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

4. மேம்பட்ட நிணநீர் செயல்பாடு: இடது பக்கத்தில் உறங்கும்போது நிணநீர் மண்டலம் மிகவும் திறம்பட வடிகட்டப்படுகிறது. இது உடலை நச்சுத்தன்மையிலிருந்து காப்பதற்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது.

5. கர்ப்பிணிகளின் ஆரோக்கியம்: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இடதுபுறம் ஒருசாய்த்துப் படுக்கும்போது அவர்களின் கர்ப்பப்பை மற்றும் கருவில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உள் உறுப்புகளின் அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த வசதியை மேம்படுத்தவும் உதவுகிறது.

6. மூளை ஆரோக்கியம்: இடது புறம் ஒருசாய்த்து தூங்கும்போது மூளையிலிருந்து இடைநிலைக் கழிவுகளை அகற்ற உதவுகிறது. அல்சைமர்ஸ் மற்றும் பார்க்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த செயல்முறை அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.

7. மண்ணீரல் ஆரோக்கியம்: உடலின் இடது பக்கத்தில் அமைந்துள்ள மண்ணீரல் இரத்தத்தை வடிகட்டுவதில் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இடது பக்கம் தூங்குவது மண்ணீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி உடலில் இருந்து சிறந்த முறையில் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

8. சிறுநீரக செயல்பாடு மேம்படுதல்: இந்த நிலை சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிறுநீரகங்களில் இருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுக்கள் சிறந்த முறையில் வடிகட்டப்படுகின்றன. ஏனெனில், இது வலது பக்கத்தில் தூங்குவதை விட இடது பக்கம் தூங்கும்போது இந்த உறுப்புகளின் அழுத்தத்தை குறைக்கிறது.

உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களை பாதிக்கும் 6 வகை உடல் பிரச்னைகள்!

9. நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது: இடதுப்புறம் தூங்கும்போது உணவுக் குழாயை விட வயிற்றைக் கீழே வைத்திருப்பதன் மூலம் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்லெக்ஸ் நோயின் அறிகுறிகளை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

10. முதுகு வலி குறைதல்: நாள்பட்ட முதுகு வலி உள்ள நபர்கள் இடது பக்கவாட்டில் தூங்கும்போது முதுகெலும்பு அமைப்பை பராமரிக்க உதவுகிறது. ஆனால், குறிப்பிட்ட இதய பிரச்னை உள்ள நபர்கள் இடது பக்கத்தில் தூங்கும்போது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இவர்கள் தங்கள் சுகாதார நிபுணரை அணுகி அவர்கள் கூற்றுப்படி உறங்குவது நல்லது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online