Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமான காம்பினேஷன்: தக்காளிக்காய் தாளிதக்கறி செய்வது எப்படி?

இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமான காம்பினேஷன்: தக்காளிக்காய் தாளிதக்கறி செய்வது எப்படி?

Kalki Online 3 months ago

க்காளிக்காயில் பொதுவாகக் கூட்டுதான் பண்ணுவார்கள். எங்கம்மா சின்ன வயசுல தாளிதக்கறியும், கட்டித் துவையலும் செய்வாள்.

அதன் ருசிக்காகவே பழுக்காத, பச்சைக்கலர் தக்காளிக்காயை தேடி வாங்குவோம். நீங்களும் செஞ்சு பாருங்க செம டேஸ்ட்ன்னு சொல்லுவீங்க...

தக்காளிக்கா தாளிதக்கறி:

தேவை:

தக்காளிக்காய்1/4 கிலோ

புளி நெல்லிக்காய் அளவு (காய் புளிப்பாக இருப்பதால் புளி கம்மியாக போதும்)

பெல்லாரி2

மிளகாய் வற்றல் 4

வெந்தயம்2 டீஸ்பூன்

கடுகு, உளுந்தம்பருப்பு தலா 1டீஸ்பூன்

கறிவேப்பிலை 5 எண்ணம்

காயப்பவுடர் 1 டீஸ்பூன்.

உப்பு திட்டமாக.

செய்முறை:

தக்காளிக்காயை அலம்பி, பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். பெல்லாரியை பொடியாக அரியவும். மிளகாய் வற்றல், வெந்தயத்தை எடுத்து வெறும் வாணலியில் வறுத்து குட்டி உரலில் நுணுக்கவும். இதுதான் நம்ம ரெசிபியோட ஹைலைட். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, அரிந்த பெல்லாரியைப் போட்டு வதக்கி விட்டு வாசனை வந்ததும் எடுத்து வைத்துவிட்டு தக்காளிக்காய் அரிந்ததை நல்லெண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

பின் ஏற்கெனவே வதக்கி உள்ள பெல்லாரி+ தாளிதத்தை சேர்த்து கரைத்த புளி, உப்பு போட்டு தண்ணீர் திட்டமாக ஊற்றி கொதித்ததும், இரண்டு கரண்டி எடுத்து ஆறியதும் கடைந்து கிச்சடியில் சேர்க்கவும். கடைசியாக வறுத்து நுணுக்கிய மி.வற்றல், வெந்தயம் பொடி சேர்த்து எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி வைத்து, கறிவேப்பிலையை இரண்டாக கிள்ளிப்போட்டு, காயப்பவுடரை தூவி, ஒருமுறை கரண்டியால் கலக்கவும். சுட சுட இட்லியில் இந்த தக்காளிக்காய் தாளிதக்கறியை ஊற்றி நல்லெண்ணெய் சிறிது சேர்த்து சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

பரீட்சை பயம் வேண்டாம்! ஞாபக சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்க அம்மாவின் 'சீக்ரெட்' ரெசிபிகள்!

தக்காளிக்கா கட்டித் துவையல்:

தேவை:

தக்காளிக்காய் 5 எண்ணம்

மிளகாய் வற்றல் 3

மிளகு 1டீஸ்பூன்

கடலை பருப்பு 2டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு 1டீஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உப்பு திட்டமாக

நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை 5 எண்ணம்

செய்முறை:

தக்காளிக்காயை வெளிப்புறம் முழுவதும் ஃபோர்க்கால் குத்திக் கொள்ளவும். கனமான வாணலியை அடுப்பில் வைத்து, தீயை மிதமாக எரிய விட்டு, நல்லெண்ணெயை ஊற்றவும்.காய்ந்ததும், மிளகாய் வற்றல், மிளகை வறுத்து எடுக்கவும். பின், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளிக்காயை போட்டு, அடிக்கடி பிரட்டி வதக்கவும். வெளி துவாரம் வழியாக எண்ணெய் சென்று ருசியைக் கூட்டும்.

மென்மையான சருமத்திற்கு கடுகு எண்ணெய் முதல் கடலை மாவு வரை!

கையால் அழுத்தினால், சாப்ட்டாக வரும் வரை வதக்கவும். வதங்கியதும், மீதமுள்ள எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வறுத்த சாமான்களுடன், வதக்கிய தக்காளிக்காய், உப்பு சேர்த்து நைசாக அரைத்து, தாளிதத்தை சேர்த்துக் கலக்கவும். சுற்றுலா செல்லும்போது, தயிர் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள வித்தியாசமான ருசியான டிஷ் தக்காளிக்கா கட்டித் துவையல். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளளாமாக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online