Dailyhunt
இல்லறம் இனிமையாக அமைய... கணவன் - மனைவிக்கான பொன்னான குறிப்புகள்!

இல்லறம் இனிமையாக அமைய... கணவன் - மனைவிக்கான பொன்னான குறிப்புகள்!

Kalki Online 3 weeks ago

ன்றைய காலகட்டத்தில் இல்லற வாழ்வு என்பது பலருக்கும் நிறைவானதாக இருப்பதில்லை. ஏதோ ஒரு சூழலில் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படுவது வழக்கம்.

அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களது குடும்ப வாழ்வு இனிமையாக அமைய வேண்டுமா? இந்த முறைகளை கையாளுங்கள்.

ஆணில் பாதி, பெண்ணும் பெண்ணில் பாதி ஆணுமே இல்லறத்திற்கு வழி வகுத்தவர்கள்.

உங்கள் வாழ்க்கை துணை விருப்பங்களை கேட்டறிந்து அவர்களுக்காக உங்கள் கோபங்களை தூக்கி எறிந்துவிட்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதால் இல்லறம் இனிமையாக அமையும்.

விடுமுறை நாட்களில் அவர்களுடன் நேரங்களை செலவிடும் பொழுது, அவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்காக அவர்கள் தங்களின் கோபங்களை தூக்கி எறிந்துவிடுவார்கள். மேலும் சில நேரங்களில் சமையலறையில் மற்ற வேலைகளில் உங்கள் மனைவிக்கு உதவினால் உங்கள் வாழ்க்கை இன்னும் இன்பமாகும்.

இல்லற வாழ்க்கைக்கு தேவையானது. பரஸ்பரபுரிதல், விட்டுக் கொடுத்தல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் இவை நிகழ்ந்தாலே இல்லறம் அந்த வீட்டில் நல்லறமாக நிலைக்கும்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான அன்பே இல்லறத்தின் மூலதனம். இதுவே கண்ணீரை தவிர்த்து விட்டால் இன்பத்தை தரும்.

குடும்பப் பொறுப்புகள் கவலைகள் அனைத்தையும் பகிர்ந்துகொள்வது, இருவருக்கும் இடையே உள்ள மன அழுத்தத்தை குறைக்கும்.

கணவன் மற்றும் மனைவி இருவரது பெற்றோர்களின் சரிசமமாக பேணி சண்டை இல்லாமல் பாதுகாப்பது அவசியம்.

சண்டை சச்சரவுகள் ஏற்படும்போது பேசி தீர்த்துக் கொள்றவும், அன்பை பரிமாறிக்கொள்ளவும் தனிப்பட்ட நேரத்தை எடுத்துக் கொள்வது அவசியம்.

கணவன், மனைவி இருவரும் தங்களுடைய கோபதாபங்களை அதிக காலம் நீடிக்க விடக்கூடாது. உடனே யாராவது ஒருவர் சமரசம் செய்து விட்டுக் கொடுக்கவேண்டும். அடுத்த வீட்டு பிரச்னைகளை தெரிந்து ஆராய்ந்து அலசி விமர்சித்து மகிழும் போக்கை தவிர்க்கவேண்டும்.

கணவன் மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளின் பார்வையில் படும்படி சண்டையிடவோ, அநாகரிகமாக, நடந்து கொள்ளவோ கூடாது.

மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு: அசத்தலான சீர் தட்டு அலங்கார டிப்ஸ்!

கணவன் மனைவி இருவரும் குழந்தைகளிடம் தம் கஷ்டத்தை, வறுமை நிலையை பெற்றோர்கள் சொல்லி கஷ்டப்படுத்த கூடாது. அவர் செய்தால் குழந்தைகள் மனது மிகவும் வாடிவிடும்.

பெருமைக்காக தேவையற்ற பொருட்களை எல்லாம் கடனில் வாங்கி வீடு நிறைய குவித்து வைத்துக் கொள்ளக்கூடாது.

கணவன், மனைவி இருவரும் சமம் என்பது புரிந்துகொண்டு அழகு, பணம் மற்ற திறமைகளை ஒப்பிட்டு பார்த்து ஒருவரை ஒருவர் தாழ்வாக நினைக்கும் மனப்பான்மையை விட்டு ஒழிக்கவேண்டும்.

குழந்தை பெற்ற பின் பெண்களின் கவனம் எல்லாம் குழந்தைகளின் மேல்தான் அதிகம் இருக்கும். அவர்களுக்கு சரியான சூழல் பேசுவதற்கு அமையாது. அதை புரிந்துகொண்டு அந்த இடைவெளியை போக்க மனைவியிடம் அன்பால் பேசுங்கள்.

இல்லறமல்லது நல்லறமன்று என்று ஒளவையாரே பாடியுள்ளார்.

இதன்படி கணவன் மனைவி இல்லறத்தில் ஒற்றுமையுடன் இருந்தால். சண்டை சச்சரவு இல்லாமல் வீடு இன்பமாக ஒளிமயமாக இருக்கும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online