Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இனி பார்லர் போகவேண்டாம்! பெர்ரி பழங்கள் தரும் 'இன்ஸ்டண்ட்' பொலிவு!

இனி பார்லர் போகவேண்டாம்! பெர்ரி பழங்கள் தரும் 'இன்ஸ்டண்ட்' பொலிவு!

Kalki Online 6 months ago

பெர்ரி பழங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ராஸ்பெர்ரி சுவையில் மட்டுமல்ல, சரும அழகை பராமரிப்பதிலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றன.

இவற்றில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி சருமத்திற்கு இளமையையும், பொலிவையும் தருகின்றன. பெர்ரி பழங்களை வைத்து வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய அழகு குறிப்புகள் இதோ:

சருமப் பொலிவுக்கு ஸ்ட்ராபெர்ரி பேக்:

ஸ்ட்ராபெரியில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும். இரண்டு அல்லது மூன்று பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறும்.

இளமையைத் தக்க வைக்க ப்ளூ பெர்ரி மாஸ்க்:

ப்ளூபெர்ரியில் உள்ள அந்தோ சயினியின்கள் (Anthocyanins) சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து முதுமையை தள்ளிப்போட உதவும். சிறிது ப்ளூ பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும் .இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தந்து மென்மையாக வைத்திருக்க உதவும்.

கருமையை நீக்க பிளாக்பெர்ரி அல்லது ராஸ்பெர்ரி:

வெயிலினால் ஏற்படும் கருப்பு நிற மாற்றத்தை (Sun Tan) நீக்க பெர்ரி பழங்கள் பெரிதும் உதவுகின்றன. பெர்ரி பழச்சாற்றுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து கருப்பாக உள்ள இடங்களில் தடவி வர சரும நிறம் சீராகும்.

5 நிமிடத்தில் பர்ஃபெக்ட் லுக்! ஸ்டைலாகவும் சுலபமாகவும் புடவை கட்டுவது எப்படி?

உதடு பராமரிப்பு:

உதடுகள் மென்மையாகவும், இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்க ஸ்ட்ராபெர்ரி ஒரு சிறந்த ஸ்கிரப் (Scrub) ஆக செயல்படும். ஒரு ஸ்ட்ராபெர்ரி துண்டுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உதடுகளில் மென்மையாக தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கி உதடுகள் பொலிவாகும்.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்க:

பெர்ரி பழங்களில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் (Anti- Inflammatory) கண்களின் வீக்கம் மற்றும் கருவளையத்தை குறைக்க உதவும்.

குளிர்ந்த பெர்ரி பழச்சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

குறிப்பாக பெர்ரிபழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். நெல்லிக்காய் போன்ற பெர்ரி வகைகள் கூந்தல் மற்றும் சருமத்திற்கு உட்புறம் இருந்தும் நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆதலால் இந்தப் பெர்ரி பழங்களை சாப்பிடுவதற்கும் பயன்படுத்தி அழகைப் பராமரிக்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online