Dailyhunt
இந்த நிலை மாறிவிடும்!

இந்த நிலை மாறிவிடும்!

Kalki Online 1 year ago

ரு ஊரில் ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து புத்தர் பேச்சைக் கேட்கத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

"புத்தரே, நாங்கள் எத்தனையோ ஞானிகளின் பிரசங்கங்களைக் கேட்டுவிட்டோம். ஆனால், அந்த போதனைகளால் எங்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை. இப்போது எங்கள் எல்லோருக்குமே ஒரு பிரச்னை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல. இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமே ஏதாவது பிரச்னை இருந்துகொண்டேதான் இருக்கிறது.

அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களை சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நீங்கள் சொல்லித்தரும் மந்திரங்கள் நாங்கள் அனைவரும் மனப்பாடம் செய்து சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்கவேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மந்திரத்தை நீங்கள் சொல்லிவிட்டால், உங்களை உலக குருவாக ஏற்றுக்கொள்கிறோம்.

"இந்த நிலை மாறிவிடும்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

ஒரு கணம் அந்தக் கும்பல் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது, புத்தர் சொன்னதை மனதுக்குள் அசைபோட்டுப் பார்த்தது.

நன்றாக படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு, அந்த வார்த்தை மிகவும் தன்னம்பிக்கை கொடுத்தது. என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. இந்த மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு பலம் பெற்றுக் கொள்வேன் என்று உரக்கச் சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அடுத்து நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தவள் எழுத்தான் "என்னுடைய நோய் கண்டிப்பாக தீர்ந்துவிடும். இந்த நிலை இனியும் தொடராது. மிக நல்ல மந்திரம்' என்று நகர்ந்து போனான்.

பணக்காரனாக இருப்பவன் எழுந்தான். "இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் புரியவைத்துவிட்டார். இனி இந்த பணத்தை என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்து கொண்டேன்" என்று கிளம்பினான்.

அழகான பெண் எழுந்தாள். "என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இந்த மந்திரம் எனக்கு புரிய வைத்துவிட்டது. நல்லதொரு மந்திரம்" என்று கிளம்பினாள்.

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தினந்தோறும் உழைத்து ஓடாகத் தேய்ந்த வயதான பெண்மணி கடைசியாக கிளம்பினாள். "இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இனியும் மரணம்வரை உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கும் இப்போது இந்த மந்திரத்தின் மூலம் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலை மாறிவிடும்" என்று நம்பிக்கையுடன் கிளம்பினார்.

ஒரு நல்லதொரு பிரசங்கம் அரை நொடியில் முடிந்த அதிசயம் அறிந்தீர்களா? எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த அதிசய மந்திரம் உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றட்டும். 'இந்த நிலை' மாறிவிடும்' என்பதை உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும் தோல்வியை சந்திப்பவர்கள், நோயில் இருப்பவர்கள். சிக்கலில் மாட்டியவர்கள், திசை தெரியாமல் தவிப்பவர்கள் அனைவரும் தினமும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம் ஏனென்றால், இது தேவ தத்துவம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online