Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவுக்கு மாபெரும் அதிர்ச்சி: நியூசிலாந்துடன் படுதோல்வி! காம்பீரின் சோதனை முயற்சி பலிவாங்கியதா?

இந்தியாவுக்கு மாபெரும் அதிர்ச்சி: நியூசிலாந்துடன் படுதோல்வி! காம்பீரின் சோதனை முயற்சி பலிவாங்கியதா?

Kalki Online 6 days ago

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணி ஏற்கனவே முதல் 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இதனால் முக்கியத்துவமற்ற 4 வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இந்திய அணி , நியூசியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியில் இஷான் கிஷன் காயத்திலிருந்து மீண்டதால் வைபவ் மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

தொடக்கத்தில் நியூசி அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் திணறிக் கொண்டிருந்தனர். முதலில் களமிறங்கிய டிம் செய்பர்ட் 3 ரன்களில் வெளியேறினார். பின் ஆலன் மற்றும் டேரில் மிச்செல் அதிவேகமாக ரன்களை உயர்த்த முனைந்த போது விரைவில் அவுட் ஆகினர். அதன் பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி திருப்புமுனையை கொடுத்தனர். 5 வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மைக்கேல் பிரேஸ்வெல் வெறும் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 65 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அதே வேளையில் களத்தில் நின்ற கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 49 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து 107 ரன்களைக் குவித்தார். 20 ஓவர்கள் இறுதியில் நியூசி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 259 என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது.

260 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடத் தொடங்கிய அணிக்கு ஆரம்பத்திலேயே சரிவு ஏற்பட்டது. முதல் ஓவரின் 2 பந்திலேயே சஞ்சு சாம்சன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அணிக்கு மீண்டும் திரும்பிய இஷான் கிஷன் டக் அவுட்டாகி அணியை இன்னும் திணற வைத்தார். கடந்த போட்டியில் நியூசி அணியை மிரட்டிய அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் 27 ரன்களில் வெளியேற இந்த அணியின் வெற்றிப் போக்கு மாறியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பற்ற முறையில் விளையாடி 22 ரன்களில் வெளியேறினார். நிதிஷ் குமார் (21 ரன்கள்) மற்றும் திலக் வர்மா (35) ஆகியோர் போராடினாலும் ஆட்டம் போதவில்லை.

 ind loss t20

இந்திய அணியின் வீரர்கள் அதிவேகமாக தங்களை குவிக்காததால் தோல்வியை நோக்கி இந்திய அணி வேகமாக சென்று கொண்டிருந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே குவித்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற போதிலும் தலைமை பயிற்சியாளரின் கவுதம் காம்பீர் சோதனை முயற்சியால் தோல்வியை தழுவி உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது.

அடிக்கடி வீரர்கள் மாற்றப்படுவதும் , இடம் மாறி இறக்குவதும் அணியில் அவர்கள் இடம் கேள்விக் குறியாவதால் ஆட்டத்தில் சொதப்பல் ஏற்படுகிறது. நியூசி அணியின் வெற்றிக்கு காரணமான பிலிப்ஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி நியூசியை ஒயிட் வாஷ் செய்யும் திட்டம் தகர்க்கப் பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online