காளான் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தருவதால், சைவ மற்றும் அசைவப் பிரியர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.
அவ்வப்போது டயட்டில் காளான் உட்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி, வைட்டமின் டி, பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, செலினியம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன. காளான்கள், குறைவான கொழுப்பு மற்றும் குறைவான கலோரி கொண்ட உணவாகும். வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள காளான், எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காளான் புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால், உடல் எடையை குறைக்கவும் மிகவும் உதவுகிறது.
அந்த வகையில் ஆரோக்கியம் நிறைந்த காளான் வைத்து இன்று இரண்டு அசத்தலான ரெசிபிகளை செய்யலாம் வாங்க. இதை ரெசிபியை காளான் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும்.
மஷ்ரூம் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
ஊற வைக்க
காளான் - 1 கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஷ்ரூம் குருமா: அசைவ உணவுக்கு நிகரான சைவ விருந்து!ஊறுகாய்க்கு
வெங்காயம் பெரியது - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 10 பல்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் வெட்டிச்கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி மெலிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி ஊறவைத்த காளானை சேர்த்து நன்றாக பிரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அடுத்து தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், பிரை செய்த காளானை அதில் சேர்த்து, அதனுடன் வினிகரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான காளான் ஊறுகாய் ரெடி.
இது ஒருவாரம் வரைக்கும் கெட்டுப்போகாது. சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
பாலக் மஷ்ரூம்
தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
தண்டு நீக்கிய பாலக் கீரை - 1 கட்டு
பூண்டு - 7 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1 நடுத்தர அளவு
தக்காளி - 1 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/3 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - 10 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 10 மில்லி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாலக்கீரையின் தண்டை வெட்டிவிட்டு, கழுவி, சூடான நீரில் போட்டு, 2 நிமிடம் வெந்தவுடன் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு நன்றாக ஆறியதும் நைசாக அரைக்கவும். கீரையை குளிர்ந்த நீரில் போட்டால்தான் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர், நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய காளான்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து காளான் வேக சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
காளான் நன்றாக வெந்ததும் இதில் தேவையான அளவும் உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்த பாலக் பேஸ்ட்டைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 முதல் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும். அதிக தீயில் வைத்தால் பாலக்கீரையின் நிறம் மாறிவிடும்.
அதனை தொடர்ந்து வெண்ணெய், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு நன்றாக கலந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான பாலக் மஷ்ரூம் ரெடி.
ரெஸ்டாரன்ட் சீக்ரெட் லீக் ஆனது... 'கார்லிக் மஷ்ரூம்' - 10 நிமிஷத்துல ரெடி!இதனை சூடாக ஃபுல்கா/சப்பாத்தி அல்லது உங்களுக்குப் பிடித்தமான ரொட்டிகள் அல்லது சூடான சாதத்துடன் பரிமாறவும்.

