Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரண்டு உலகங்களுக்கு நடுவில் நசுங்கும் பெண்கள்: சாண்ட்விச் ஜெனரேஷன் உண்மை முகம்!

இரண்டு உலகங்களுக்கு நடுவில் நசுங்கும் பெண்கள்: சாண்ட்விச் ஜெனரேஷன் உண்மை முகம்!

Kalki Online 1 month ago

40-59 வயதுக்குள் உள்ள பெண்கள் இரண்டு தலைமுறைகளின் தேவைகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்க வேண்டிய சாண்ட்விச் ஜெனரேஷனாக இருந்து, குழந்தைகளின் கல்வி செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக மன, உடல் சோர்வை அனுபவிக்கிறார்கள்.

குடும்ப ஆலோசனை, குழந்தைகளை சுயநிறைவு பெறச் செய்வது, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், பகுதி நேர செவிலியர் உதவி போன்றவை அவர்களின் வாழ்க்கைச் சுமையை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

சாண்ட்விச் ஜெனரேஷன் என்பது நடுத்தர வயதுடைய (பொதுவாக 40-59 வயது) பெரியவர்கள், தங்கள் வயதான பெற்றோர்களையும், தங்களைச் சார்ந்திருக்கும் பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்ளும் நிலையைக் குறிக்கிறது.

இரண்டு தலைமுறைகளையும் ஒரே நேரத்தில் தோளில் சுமக்கும் பெண்களையே 'சாண்ட்விச் ஜெனரேஷன் என்கிறார்கள். இரண்டு தலைமுறைகளின் தேவை களுக்கும் (நிதி, உடல்நலம் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு) நடுவில், ஒரு சாண்ட்விச்சின் நடுப்பகுதி போல இவர்கள் நசுக்கப்படுவதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

இந்தத் தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களும் அவற்றை நிர்வகிக்கும் வழிகளும்:

1. நிதி சுமை:

குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான செலவுகள் ஒருபுறம், வயதான பெற்றோரின் மருத்துவச்செலவுகள் மறுபுறம் என ஒரே நேரத்தில் இரண்டு தலைமுறைகளின் பொருளாதார சுமையை சுமக்கவும் சமாளிக்கவும் வேண்டியுள்ளது.

2. மன அழுத்தம்:

ஒரு பக்கம் வயதான பெற்றோர்களின் பராமரிப்பு, மறுபக்கம் வளரும் பிள்ளைகளின் எதிர்காலம் என இரண்டு தலைமுறைகளையும் ஒரே நேரத்தில் தோளில் சுமக்க வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். அத்துடன் வீட்டை பராமரிப்பவர்களாக மட்டும் இல்லாமல் குடும்பத்தின் நிதி மேலாண்மையிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டி உள்ளது.

 சாண்ட்விச் ஜெனரேஷன்

வேலை, குடும்பம், பெற்றோர் கவனிப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு என அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் தனிப்பட்ட வாழ்க்கைக்கோ, ஓய்வுக்கோ நேரம் கிடைப்பதில்லை.

இரண்டு தலைமுறையினருக்கும் நேரத்தை ஒதுக்கி, தங்களின் சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படித் தொடர்ந்து கவனிக்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதன் காரணமாக மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் நாள்பட்ட சோர்வு போன்ற உடல் நலக் (ஆரோக்கிய) குறைபாடுகள் ஏற்படுகின்றன.

1 மணி நேர மேஜிக்: சோர்வில்லாமல் வீட்டை பளபளப்பாக மாற்ற எளிய வழிகள்!

3. தனிப்பட்ட இலக்குகள் பாதிப்பு:

வேலைக்குச் செல்லும் நபர்களாக இருந்தால் அலுவலகப் பணிகளை செய்வதிலும், குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தங்கள் சொந்தத் தொழில் அல்லது நீண்ட காலக் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகிறது. குடும்பத்தின் தற்போதைய தேவைகளுக்காக மட்டுமே வாழ வேண்டிய சூழலும் உருவாகிறது. தங்களின் சொந்த வாழ்க்கை, பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது. வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே நேரத்தை ஒதுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

4. நிர்வகிக்கும் அல்லது சமாளிக்கும் வழிகள்:

குடும்ப உறுப்பினர்களுடன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், நேர மேலாண்மை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவது நல்லது.

5. குடும்பத்தினருடன் கலந்தாலோசியுங்கள்:

அனைத்துப் பொறுப்புகளையும் நீங்களே சுமக்காமல், வயதான பெற்றோரின் பராமரிப்புப் பொறுப்புகளை வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது ஓரளவு சுமையைக் குறைக்க உதவும்.

பொறுப்பான ஆண்களை உருவாக்குவோம்! அப்பாக்களே! உங்கள் மகனுடன் நேரம் செலவிடுங்கள்.

6. குழந்தைகளை சுதந்திரமாக்குங்கள்:

டீன்-ஏஜ் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் தங்கள் சொந்த வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளவும், சிறு சிறு உதவிகளைச் செய்யவும் பழக்கிவிடலாம்.

7. நிதி திட்டமிடல் அவசியம்:

பெற்றோருக்குரிய மருத்துவக் காப்பீடு (Health Insurance), ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு நிர்வகிக்கலாம்.

8. 'முடியாது' எனச் சொல்லப் பழகுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. எனவே அனைவரையும் திருப்தி படுத்த முயன்று நம் ஆற்றலை முழுமையாக இழக்க வேண்டாம். தேவையற்ற பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கத் தயங்க வேண்டாம். மன அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளலாம்.

9. தொழில்முறை உதவிகள்:

மிகவும் முதியவர்கள் அல்லது தீவிர மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் பெற்றோருக்கு பகுதி நேர செவிலியர்கள் அல்லது முதியோர் பராமரிப்பு மையங்களின் உதவியை நாடலாம். இது நம் வேலைப்பளுவைக் குறைப்பதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

உங்கள் குடும்பத்தின் எதிர்காலப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதோடு, அன்றாட அழுத்தங்களைச் சமாளித்து சுயமரியாதையுடன் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தேவையான தெளிவைப் பெறுவீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online