Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரட்டை பிள்ளையார் முதல் இரட்டை ராமர், நரசிம்மர், வரை தமிழ்நாட்டின் அபூர்வ திவ்யத் தலங்கள்!

இரட்டை பிள்ளையார் முதல் இரட்டை ராமர், நரசிம்மர், வரை தமிழ்நாட்டின் அபூர்வ திவ்யத் தலங்கள்!

Kalki Online 1 week ago

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான மிகவும் புகழ்பெற்ற இரட்டை பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

ஒரே கருவறையில் இரண்டு விநாயகர்கள் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

* தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள இந்த மலையடிவாரக் கோயிலில், ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் (கனககிரீசுவரர் மற்றும் காசி விசுவநாதர்) அருகருகே காட்சி தருகின்றனர்.சிறப்பு: சுயம்புவாகத் தோன்றிய லிங்கம் மறைந்ததால் காசியிலிருந்து மற்றொரு லிங்கம் கொண்டு வரப்பட்டது; பின்பு சுயம்பு லிங்கமும் கிடைக்கவே இரண்டையும் ஒரே கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

* புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயிலில், மூலவர் கருவறையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் ஒரு பெருமாளும், அருகிலேயே நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி பெருமாளும் இரு மூலவர்களாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.

* ஒரே கருவறையில் இரண்டு ராமர் அருள்பாலிக்கும் தலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகிலுள்ள ஊனமாஞ்சேரி என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் ஆகும். இந்த ஆலயத்தின் கருவறையில் இருவேறு அளவிலான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் (இரு செட்) சிலைகள் ஒரே கருவறையில் காணப்படுகின்றன.

* திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோயிலில், சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகருகே இரண்டு சண்டிகேஸ்வரர்களை தரிசிக்கலாம்.

* கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயிலில் அருகருகே காட்சி தரும் இரட்டை தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

* மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள மேலப்பாதி (செம்பனார்கோவில்) பகுதியில் அமைந்துள்ள இரட்டை ஆஞ்சநேயர்.கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தட்சிணாமூர்த்தி தரிசனங்கள்: மாயவரம் முதல் காஞ்சிபுரம் வரை வியக்கும் வித்தியாச கோலங்கள்!

* நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ள இரட்டை சிவன் கோவில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இது அகஸ்தீஸ்வரர் (சிவன்) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) ஆகிய இரு மூலவர்கள் அருகருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.

* சீர்காழி அருகே உள்ள திருநகரி ஸ்ரீ நரசிம்மர் கோவிலில், ஸ்ரீ ஹிரண்ய நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் ஆகிய இரண்டு நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.

* சீர்காழி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரட்டைக் காளியம்மன் கோவிலில் சக்தி வாய்ந்த இரண்டு காளியம்மன் திருவுருவங்கள் உள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online