Dailyhunt
இரவில் ஒளிரும் மீன்கள் மற்றும் பூச்சிகள்!

இரவில் ஒளிரும் மீன்கள் மற்றும் பூச்சிகள்!

Kalki Online 1 year ago
 Glowworms

மின்மினி பூச்சி (Glow worms): Glow worms என்ற சில வகை வண்டுகளின் லார்வாக்கள் larvae இரையை ஏற்பதற்காகவோ அல்லது துணையை ஈர்ப்பதற்காகவோ பச்சை அல்லது நீல நிறத்தில் ஒளி விடுகின்றன.

 Lantern Fish

லாந்தர் மீன் (Lantern Fish): இவை ஆழ்கடல் மீன்களாகும். இந்த விளக்கு மீன்கள் சிறிய அளவில் இருக்கும். உடலில் ஒளியை உருவாக்கும் உறுப்புகளை தங்கள் உடலில் கொண்டுள்ளன.

 Angular Fish

ஆங்லர் ஃபிஷ் (Angular Fish): கடலின் ஆழத்தில் காணப்படும் ஆங்லர்ஃபிஷ் இருளில் இரையை ஈர்க்க அதன் நெற்றியில் ஒரு ஒளிரும் உறுப்பை கொண்டுள்ளது. ஆழ் கடலில் வேட்டையாடும் இந்த ஆங்லர்ஃபிஷ், இரையை ஈர்ப்பதற்காக எஸ்கா எனப்படும் பயோலுமினசென்ஸ் Bioluminescence பயன்படுத்துகிறது.

 Vampire Squid

வாம்பயர் ஸ்க்விட் (Vampire Squid): இவை ஆழ்கடல் செபலோபாட் (Cephalopod) ஆகும். இவை ஒளியை உற்பத்தி செய்யும் செல்களைக் கொண்டுள்ளன. ஆழ்கடலில் தொடர்புக்காகவும் மற்றும் உருமறைப்புக்காகவும் ஒளியைப் பயன்படுத்துகின்றன.

 Marine Hotset Fish

மரைன் ஹாட்செட் ஃபிஷ் (Marine Hot set Fish): இது ஆழ் கடல் மீனாகும். இவை தன் உடலில் பிரதிபலிப்பு மேற்பரப்புகளை (Reflective surfaces) கொண்டுள்ளன.

 Click Beetle

ஒளிரும் கிளிக் வண்டுகள் (Click Beetle): கிளிக் வண்டுகள் தங்கள் உடலை ஸ்னாப்பிங் செய்வதன் மூலம் கிளிக் செய்யும் ஒலியை உருவாக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன. இவை பச்சை நிற பளபளப்பை வெளியிடுகின்றன.

 Sea glittering Fish

கடல் மின்மினி பூச்சிகள் (Sea glittering Fish): மின்மினி பூச்சிகள் துணையை ஈர்ப்பதற்காக மெல்லிய ஒளியை வெளியிடுகின்றன.

 Glittering Worm

பளபளப்பு புழுக்கள் (Glittering Worm): இவை மின்மினி பூச்சிகளைப் போலவே பயோலுமினசென்ட் (Bioluminescent) ஒளியை உருவாக்குகின்றன. இந்த லார்வாக்கள் இரையை ஈர்க்க மென்மையான ஒளியை வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும் இருண்ட குகைகள் அல்லது மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளில் காணப்படும்.

 Jelly Fish

ஜெல்லி மீன் (Jelly Fish): பல்வேறு வகையான ஜெல்லி மீன்களின் பயோலுமினெசென்ஸ் (Bioluminescence) பெரும்பாலும் தற்காப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. வேட்டையாடுபவர்களை திகைக்க வைக்க அல்லது கடல் ஆழத்தில் துணையை ஈர்க்க அழகான ஒரு அதிர்ச்சியூட்டும் ஒளிக் காட்சியை உருவாக்குகின்றன.

 Fungus

பூஞ்சை (Fungus): சில வகையான பூஞ்சைகள் (ஃபாக்ஸ்ஃபயர் பூஞ்சை போன்றவை), இருட்டில் மென்மையான ஒளியை வெளியிடும். இவை பெரும்பாலும் அழுகும் மரத்தில் காணப்படுகின்றன.

 Firefly Squid

ஃபயர்ஃபிளை ஸ்க்விட் (Firefly Squid): பசிபிக் பெருங்கடலில் காணப்படும் இந்த சிறிய ஸ்க்விட், வேட்டையாடுபவர்களை தவிர்ப்பதற்காக கடல் மேற்பரப்பில் ஒளியை பரப்புகிறது.

 Rail Road Worm

இரயில் புழுக்கள் (Rail Road Worm): தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த வண்டு லார்வாக்கள் ரயில் விளக்குகளை ஒத்த வடிவில் ஒளிரும் உடல்களைக் கொண்டுள்ளன.

 Scorpion

தேள் (Scorpion): சில தேள் இனங்கள் ஒரு ஃப்ளோரசன்ட் எக்சோஸ்கெலட்டனைக் (Fluorescent exoskeleton) கொண்டுள்ளன. இது புற ஊதா ஒளியின் கீழ் தெரியும். இருட்டில் ஒரு வினோதமான கண்கவர் காட்சியை உருவாக்குகிறது.

 T20 World Cup 2024Interesting facts about the ICC Men's T20 World Cup 2024!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online