Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த சில சூப்பர் வழிகள்!

இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த சில சூப்பர் வழிகள்!

Kalki Online 6 months ago

ன்று நகரங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான பால்கனி மற்றும் மாடியில் தொட்டிகளிலோ அல்லது பைகளிலோ அன்றாடத் தேவைகளுக்கான காய்கறி தோட்டம் அமைத்து பயிர் செய்கிறார்கள்.

அந்தத் தோட்டத்தை மேம்படுத்த சில எளிய இயற்கை வழிகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

உர மேலாண்மை (Fertilizer Management):

1. அரிசி, பருப்பு கழுவும் நீரை செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஸ்ப்ரே செய்யலாம்.

2. முட்டை வேக வைத்த நீரை குளிர வைத்து இன்டோர் பிளாண்ட்ஸில் தெளிக்கலாம்.

3. காய்கறி, வெங்காயம், பூண்டு கழிவு நீரை ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி செடிகளுக்கு ஊற்றலாம்.

4. வாழைப்பழத் தோலை காய்கறி தொட்டிகளில் போடலாம். இது மக்னீசியம் சத்து நிறைந்தது.

5. பழத் தோல் நீரை இரண்டு நாள் ஊறவைத்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.

ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் சேர்வதைத் தடுக்க ஒரு சூப்பர் ட்ரிக்!

6. காய்கறி கழிவுகளை காயவைத்து உரம் தயாரிக்கலாம், மண் / மண்புழு உரம் சேர்த்து கிளறி வைக்கலாம். இதனால் ஒரு மாதத்தில் இயற்கை மண்புழு உரம் நமக்குக் கிடைக்கும்.

7. கோல்டன் வாட்டர் (Golden Water) உரத் தண்ணீரை சாதாரணத் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றினால் பூக்கள், காய்கள் அதிகம் கிடைக்கும்.

8. டீ மற்றும் காபி தூளை வெயிலில் உலர்த்தி வாரம் ஒருமுறை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

9. முட்டை ஓட்டை பொடியாக்கி சுத்தம் செய்து உரமாகப் பயன்படுத்தலாம் (வேக வைத்தது வேண்டாம்).

10. காய்ந்த இலைகளை மாதம் ஒருமுறை சேகரித்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

செடிகள் வளர்ப்பு வழிமுறைகள் (Plant Care & Growing Tips):

1. சிறிய தொட்டிகளில் கீரை வகைகளை விதைத்து வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.

2. சிறு கீரை வகைகளை கலந்து விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.

3. பாலக் போன்ற கீரைகளை பெரிய தொட்டிகளில் வளர்க்கலாம்.

வீட்டினை இயற்கையால் நிரப்பும் 38 சிறந்த உட்புற தாவரங்கள்!

4. கீரையை பறிக்கும்போது தண்டுகளை விட்டுப் பறித்தால் மீண்டும் புதிய தளிர்கள் விட உதவும்.

5. தக்காளி நாத்தை ஒரு தொட்டிக்கு இரண்டு வீதம் வைத்து கம்பி/ கயிறு கட்டி விட்டால் நிலத்தில் படராமல் வளர உதவும்.

6. மிளகாய் நாத்தை 2 அல்லது 3 வீதம் ஒரே தொட்டியில் நடுவது நல்லது.

7. புதினா கிளையை சிறிய தொட்டிகளில் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்கலாம்.

8. காய்கறி செடிகளுக்கு மத்தியில் மேரிகோல்டை (சாமந்தி) நடுவில் வைத்தால் அழகும் புத்துணர்ச்சியும் அளிப்பதோடு, பூச்சிக் கட்டுப்பாடு அதிகரிக்கும்.

9. டேபிள் ரோஜா செடியை வீட்டின் ஜன்னல் அருகில் வைக்கலாம்.

10. பாகல் போன்ற கொடி வகைகளை கம்பி, கயிறு கட்டி வளர்க்கலாம்.

டீன் ஏஜ் ஆண் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்றும் 10 ரகசியங்கள்!

11. கத்தரி, வெண்டை, முள்ளங்கி போன்றவற்றை எளிதில் வளர்க்கலாம்.

12. சிறு தொட்டிகளில் மணத்தக்காளி கீரையை விதைத்தால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.

13. துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளையும் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.

பூச்சி கட்டுப்பாடு (Natural Pest Control):

1. பெருங்காயம் + புளித்த மோர் + தண்ணீர் சேர்த்துத் தெளிக்கலாம்.

2. இஞ்சி + பூண்டு + மிளகாய் அரைத்து அதைத் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.

3. லெமன் லிக்விட் அல்லது எலுமிச்சைச் சாறை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

4. பேக்கிங் சோடா, உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஸ்ப்ரே செய்யலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online