Dailyhunt
#JUST IN: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.!

#JUST IN: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.!

Kalki Online 3 weeks ago

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரால், உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரானை முழுமையாக அழித்து விடுவோம் என டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இதற்கு பதிலடி தாக்குதல் தொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சில முக்கிய பகுதிகளை ஈரான் தாக்கியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை "கற்காலத்திற்கு தள்ளி விடுவோம்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இதற்கு சற்றும் பயப்படாத ஈரான், அமெரிக்காவிற்கு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது.

"ஈரானை மிரட்டும் அமெரிக்கா, ஏற்கனவே கற்கால மனநிலைக்கு சென்று விட்டது" என பதிலடி கொடுத்துள்ளது ஈரான்.

வெயிலில் வாடிய கேமராமேனுக்கு விஜய் செய்த மனிதாபிமான செயல்..! வைரலாகும் விஜய்யின் மனிதாபிமான வீடியோ..!

ஈரானுக்கு உதவும் ஈராக் ஆயுதக் குழு அமைப்பு, ஏற்கனவே அமெரிக்கா மீது தாக்குதலை தொடங்கி விட்டது. இந்நிலையில் மேலும் சில தாக்குதல்களை தொடங்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேசமயம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக ஈராக்கை சேர்ந்த கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எண்ணெய் விநியோகத் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டு அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING: சென்னையில் வருமான வரித்துறை 10 இடங்களில் திடீர் சோதனை.!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online