Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கடற்கரை, அரண்மனை, நீர்வீழ்ச்சி: கொச்சியின் டாப் 7 சுற்றுலா இடங்கள்!

கடற்கரை, அரண்மனை, நீர்வீழ்ச்சி: கொச்சியின் டாப் 7 சுற்றுலா இடங்கள்!

Kalki Online 3 months ago

யற்கை சூழல் நிறைந்த கட்டிடங்கள், டெய்லி தோட்டங்கள், கடற்கரைகள் இவற்றைப் பார்க்கவேண்டுமா? இதற்கு சரியான சுற்றுலா செல்ல வேண்டிய இந்த இடங்களை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.

அதில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.

செராய் கடற்கரை - கொச்சி

 செராய் கடற்கரை

இந்தியாவில் கேரளாவின் சிறந்த கடற்கரையில் ஒன்றாக செராய் கடற்கரை விளங்குகிறது. எர்ணாகுளத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கிராம சூழலில் அமைந்துள்ள இந்த கடற்கரை மணல் பரப்பு நீச்சல் மற்றும் நீர் நடவடிக்கைகளுக்கும் சிறந்தது. இங்கு டால்பின் மீன்களை எளிதாக காணலாம். புகைப்படக் கலைஞர்கள் தங்களுக்கு பிடித்த விருப்பமான புகைப்படங்களை எடுக்கலாம். பசுமையான நெல் வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகள் உண்டு.

இங்கு சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்து உட்கார்ந்து ஓய்வெடுக்க இது ஒரு சிறந்த இடம் கேரளாவில் மிகவும் காதல் நிறைந்த கடற்கரையில் இதுவும் ஒன்று. இங்கு கடல் காற்று மட்டுமல்ல அமைதியான காதல் நிறைந்த இடமாகவும் விளங்குகிறது தேன் நிலவு கொண்டாடும் புது மணத் தம்பதியருக்கு ஏற்ற இடமாகும்.

கேரளா வரலாற்று அருங்காட்சியகம்

 கேரளா வரலாற்று அருங்காட்சியகம்

கேரளாவின் பழமையான கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியங்களில் இது ஒன்றாக கருதப்படுகிறது. கொச்சியின் பயணத்தில் முதலில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். கேரளாவின் கொச்சின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை காட்டும் கண்காட்சிகளில் அழகான கலப்பைப்புகளை இங்கு காணலாம். திங்கள் தவிர ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.

ஃபோர்ட் கொச்சி

 ஃபோர்ட் கொச்சி

ஃபோர்ட் கொச்சியில் ஒரு அற்புதமான சூரிய அஸ்தமனத்தைக் கண்டு மகிழலாம். சூரிய அஸ்தமனத்தில் ஒரு சரியான நடைபயணமும் செய்யலாம். கடற்கரையில் குளித்தல் நீச்சல் நடவடிக்கைகள் இங்கு செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. சுவையான கடல் உணவுகள் ஷாப்பிங் கேரளாவின் பாரம்பரிய மற்றும் நடன வடிவமான கதகளி நிகழ்ச்சிகளை புத்தாண்டு தினத்தன்று கண்டுக்களிக்கலாம்.

டச்சு அரண்மனை

 டச்சு அரண்மனை

போர்த்துக் கீசியர்களால் கட்டப்பட்டு 1555 ஆம் ஆண்டு கொச்சின் முன்னாள் மன்னர் வீர கேரள வர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்த அரண்மனை 1633 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கடுமையாக வேலை செய்து கட்டிடத்தை புதுப்பித்ததால் இது புகழ் பெற்றது. கொச்சி மன்னர்கள் இந்த இரட்டை மாடி கட்டமைப்பின் மைய மண்டபத்தில்தான் தங்கள் முடி சூட்டு விழா சடங்குகளை செய்தனர்.

இங்குள்ள அறைகளில் பிற சிறந்த இந்திய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதர் காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. இந்த டச்சு அரண்மனை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் கிடையாது.

லோஃபர்ஸ் கார்னர் பிரின்சஸ் தெரு

 லோஃபர்ஸ் கார்னர் பிரின்சஸ் தெரு

ஃபோர்ட் கொச்சியில் கட்டப்பட்ட ஆரம்பகால தெருக்களில் ஒன்றாக ஐரோப்பிய நேர்த்தியுடன் கூடிய பிரின்சஸ் தெரு, பழைய கலாச்சார உலக அழகை வெளிப்படுத்துகிறது. இந்த அழகிய தெருவின் சிறந்த காட்சியை கார்னரிலிருந்து காணலாம்.

இது சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், வேடிக்கை பார்ப்பதிலும் அதிக ஆர்வம் உள்ள இப்பகுதியில் உள்ள அந்த மக்களின் வழக்கமான ஒன்று கூடும் இடமாகவும் ஓய்வெடுக்கும் இடமாகவும் இது அமைந்துள்ளது.

மங்கள வனம் பறவைகள் சரணாலயம்

 மங்கள வனம் பறவைகள் சரணாலயம்

மங்கள வனம் பறவைகள் சரணாலயம் ஒரு உணர்வு திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் இடமாகும் .இங்கு அலைகள் நிறைந்த ஏரி புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் சதுப்பு நில காடுகள் உள்ளன. மேலும் உலகம் முழுவதுமிலிருந்து பறவைகள் இங்கு இடம் பெயர்ந்து வந்து தங்கும் இங்கு வருவதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஏனெனில் மரங்கள் பசுமையாக பூத்து குலுங்குகின்றன உலகம் முழுவதிலிருந்து பறவைகள் வந்து தங்குகின்றன. இந்த சரணாலயத்தின் செழுமை நமக்கு பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

 அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி 80 மீட்டர் உயரத்திலிருந்து விழும் அதிசயம் பார்க்க ரம்மியமாக இருக்கும். இந்தியாவில் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த அருவிபால் வெள்ளை நிறத்தில் அடிவாரத்தில் நுரையுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. இது பார்வையாளர்களை மிகவும் வசீகரிக்கும். இது ஆனை முடி மலைகளில் இருந்து வெளிப்பட்டு காடு முழுவதும் பாய்கிறது. இங்கு படு சவாரி செய்யலாம். ஒருநாள் கழிக்க நல்ல ரிசார்ட்சும் உண்டு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online