Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கை, கால் திடீர் துடிப்பு... வலிப்பு நோய் ஏற்படுவது ஏன்? மருத்துவர் தரும் முக்கிய எச்சரிக்கை!

கை, கால் திடீர் துடிப்பு... வலிப்பு நோய் ஏற்படுவது ஏன்? மருத்துவர் தரும் முக்கிய எச்சரிக்கை!

Kalki Online 1 week ago

லிப்பு நோய்க்கான உண்மையான நரம்பியல் காரணங்கள், அதன் வகைகள் மற்றும் வலிப்பு ஏற்படும்போது நோயாளியின் கையில் இரும்புப் பொருளை வைப்பது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்த்து முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது ஆகியவை குறித்து, பொது மருத்துவர் டாக்டர் பிரகதீஷ் (MBBS) அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வோம்.

வலிப்பு நோய் என்பது நரம்பியல் பாதிப்புகளால் ஏற்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு நோய் வரும்போது கை, கால்களில் திடீரென தசை இழுப்பு உண்டாகி, அவர்கள் சில நிமிடங்கள் நினைவிழந்து கூட போகலாம். இந்த வலிப்பு நோய் உருவாக காரணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடும். அதற்கான அறிகுறிகள், தீர்வுகள் என பல கட்டங்களாக மருத்துவர்களால் கண்காணிக்கப் பட்டு குணப்படுத்த முடியும்.

மூளையின் செல்களில் இயல்பாகவே தகவல் பரிமாற்றத்தின் போது சிறிய அளவிலான மின்சாரம் உற்பத்தி ஆகும். இப்படி உற்பத்தி யாகும் மின்சாரம் ஏதோ ஒரு காரணத்தால் அதிகமாகவோ அல்லது இயல்புக்கு மாறான அளவிலோ உற்பத்தியானால் உடலில் வலிப்பு உண்டாகி நரம்பியலில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு இருக்கிறது என தெரிவிக்கும்.

இந்த வலிப்பு நோய் எந்த பகுதியில் உருவாகிறது என்பதை பொறுத்து சில வகைகளாக வரையறுக்கப் படுகிறது. நோயாளிகளுக்கு வலிப்பு ஏற்படும்போது அருகிலிருந்தவர்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்து வலிப்பு நோயின் வகையை கண்டறிய முடியும்.

அதாவது முதலில் வலது கட்டை விரல் துடிக்க ஆரம்பித்து அடுத்து முழு வலது கையும் துடிக்க ஆரம்பித்து, கடைசியாக உடலில் வலது பக்கம் வலிப்பு ஏற்பட்டால் அதை பகுதி வலிப்பு (Partial Epilepsy) என்பார்கள்.

அதுவே சத்தமாக கத்தி கீழே விழுந்து உடல் முழுவதும் துடிக்க ஆரம்பித்து சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்று நாக்கை கடித்து, வாயில் நுரை வந்தால் அது முழு வீச்சு பாதிப்பாகும் (Generalized Epilepsy).

இவை இரண்டும் வலிப்பு நோயின் முக்கிய வகைகள். இதைதவிர அறிகுறிகளை பொறுத்து சில உட்பிரிவுகளும் உள்ளன.

வலிப்பு நோய் வர காரணங்கள்

சிலருக்கு தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். தூக்கமின்மை, மூளையில் தொற்று ஏற்படும் போது மூளைக்காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது வரலாம். கல்லீரல் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு, பக்கவாதம், டிமென்ஷியா, மரபணு கோளாறுகளாலும் வலிப்பு நோய் தோன்றலாம். வலிப்பு நோய் வந்ததை கண்டு பிடித்தவுடன் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். வீட்டிலேயே வைத்து இரும்பு பொருள் கொடுப்பது, குடிக்க ஏதாவது கொடுப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 Epilepsy | வலிப்பு நோய்

மருத்துவர்கள் வலிப்பிற்கான காரணத்தை முதலில் கண்டறிவார்கள். பக்கவாதத்தோடு வலிப்பு ஏற்பட்டால் இரண்டுக்கும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மூளையில் கட்டி ஏற்பட்டு அதனாலும் வலிப்பு ஏற்படலாம்.

மருத்துவர்கள் அடிப்படை இரத்த பரிசோதனை செய்து மூளையின் ரத்த ஓட்டத்தை அளவிட ஈ.ஈ.ஜி எடுப்பார்கள். இதில் பெரும்பாலோருக்கு நார்மலாகவே காட்டும். அதனால் சி.டி ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் வகைகளையும், காரணத்தையும் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடங்குவர்.

காய்ச்சல் வந்தால் உடனே ஹாஸ்பிட்டல் ஓடணுமா? குழந்தைகளிடம் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உஷார்!

பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் வலிப்பின் வகையைப் பொறுத்து மாத்திரைகள் மூலம் வலிப்பைக் கட்டுப் படுத்தி மீண்டும் வராமல் தடுக்க முடியும். மருத்துவர்களின் பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றி மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

முதலில் 5 ஆண்டுகள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டு வலிப்பு வராமல் இருந்தால் அடுத்த கட்டமாக மாத்திரைகள் இல்லாமல் அல்லது குறைத்து வலிப்பு வராமல் இருந்தால் இந்நோயிலிருந்து விடுபட்டதாக மருத்துவர் சொல்வார். அதுவரை மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

தீவிரமான வலிப்பு வந்து அதை மாத்திரைகள் மூலம் குணப்படுத்த இயலாது எனில் அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட திசுவை அகற்றி சிகிச்சையை மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் மூலம் வலிப்பைக் குணப்படுத்துவார்கள்.

புற்றுநோய்க்கு முடிவு கட்டுமா 'Software in a Syringe'? mRNA தடுப்பூசி தரும் புதிய நம்பிக்கை!

எல்லாவற்றுக்கும் அடிப்படை சிறுவயதிலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதே. வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை, மருத்துவ காப்பீடு என கவனமாக இருக்க ஆரோக்கியம் நம்மை காக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online