Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலையிலேயே குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்தது தங்கம் விலை..!

காலையிலேயே குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்தது தங்கம் விலை..!

Kalki Online 3 weeks ago

ங்கத்தின் விலை நேற்று காலை ரூ.2,160 சரிந்த நிலையில், திடீரென மாலையில் ரூ.1,360 ஏறியது. காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த வெள்ளி விலை, மாலையில் ரூ.5 உயர்ந்தது.

பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்த நிலையில், அதன் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

தங்கத்தின் இந்த ஏற்ற, இறக்கத்தின் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், தங்க மற்றும் வெள்ளி முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். நேற்று (ஜூன் 30) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.800 குறைந்த விலையில், வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையானது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 01) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூலை 01-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கும், 1 கிராம் ரூ.9,020-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்திருப்பதை உணர முடிகிறது.

2025 ஜூலை 01 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 goldAI-க்கு வேலை இல்லை.. மீண்டும் மனிதர்களை தேடும் ஃபோர்டு: ஏன் இந்த திடீர் மாற்றம்..?

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 30: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஜூன் 29: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

ஜூன் 28: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

ஜூன் 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960

ஜூன் 26: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 30: 1 கிராம் - ரூ.245

ஜூன் 29: 1 கிராம் - ரூ.245

ஜூன் 28: 1 கிராம் - ரூ.245

ஜூன் 27: 1 கிராம் - ரூ.245

ஜூன் 26: 1 கிராம் - ரூ.245

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் தற்போதைய சூழலில், இதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதற்கேற்ப பொருளாதார நிபுணர்களும் வருங்காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரும் என்றே கணித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக லாபத்தைக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

தவெக-வா? திமுக-வா? எஸ்.பி.வேலுமணியின் முடிவு என்ன?Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online