Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கண் வீக்கமா? நீங்கள் தெரியாமல் செய்யும் 4 பெரிய தவறுகள் இதோ!

கண் வீக்கமா? நீங்கள் தெரியாமல் செய்யும் 4 பெரிய தவறுகள் இதோ!

Kalki Online 2 months ago

ரு சிலருக்கு கண்களின் கீழ் வீங்கி காணப்படும். கண்களின் கீழ் வீக்கம் பெரும்பாலும் வயது, நரம்பு பலவீனம், கொலாஜன் குறைவு, தூக்கமின்மை, அதிக உப்பு, மது, ஹார்மோன் சமநிலை குலைவு, குப்புறப்படுப்பு, டிவி/மொபைல் அதிகம் பார்ப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

இது அபாயமில்லாதது என்றாலும், நீர் சேர்வு, சோர்வு, மரபியல் காரணங்கள் மூலம் மோசமடையலாம்; காரணத்தை கண்டறிதல் முக்கியம். நாம் நம் வாழ்க்கை முறையில் சில மாறுதல்களைச் செய்தால் இந்தப் பிரச்னையைச் போக்கலாம்.

கண் வீக்கம் எதனால் ஏற்படுகிறது

கண்களுக்குக் கீழ் வீங்கியது போல் சிலருக்குக் காணப்படும். இது அந்த இடத்தில் தண்ணீர் சேர்ந்திருப்பதால் வீக்கம் அடைகிறது. இரண்டு கண்களிலும் இது ஏற்படும். இது அபாயமில்லாதது‌ வலியும் இல்லாதது. சிலர் கண் வீக்கத்தையும், கண்களின் கீழ் ஏற்படும் கருமையும் ஒன்று என நினைக்கிறார்கள். Eyebag என்பது கொழுப்பும், நீரும் சேர்வதால் ஏற்படும் வீக்கம். கண்ணின் கருமை பிக்மெண்டேஷன் பிரச்னையால் ஏற்படுவது.

வயதானால் Eyebags அதிகமாகும்

கண்களைச் சுற்றியிருக்கும் நரம்புகள் வயது ஆகும் போது பலவீனமடைவதால் இது ஏற்படலாம். மேலும் சருமத்தில் கொலாஜன் குறையும் போது கண்களின் கீழ் பெரிதாகி கண் வீக்கம் ஏற்படுகிறது.

 Eye care

இதற்கான காரணங்கள்

இதற்கான காரணங்கள் பல உள்ளன. சரியான காரணத்தைக் கண்டு பிடித்தால் தீர்வு கிடைக்கும்.

நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பதும் கண் வீக்கத்திற்கு காரணமாகலாம். நல்ல தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு கண்களின் கீழ் நீர் கோர்த்துக் கொண்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மிக லேட்டாக இரவில் தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

வயதாகும் போது பலவீனமான நரம்புகளால் இப்படி ஆவதும் உண்டு. இதை வெறும் க்ரீம் மட்டும் கொண்டு சரிசெய்து விட முடியாது.

அதிக அளவு உப்பு பயன்படுத்தல், மது அருந்துதல், ஹார்மோன்களின் சமச்சீரின்மை, மேலும் குப்புறப்படுப்பது போன்றவற்றால் இந்த பிரச்னை நேரிடும்.

காலையில் எழுந்திருக்கும் போது வீக்கம் அதிகமாக இருக்கும்.

ஒருசிலருக்கு அழற்சியாலும் மேலும் ஒருசிலர் கண்களை அடிக்கடி கசக்குவதாலும் இது ஏற்படலாம்‌. கண்கள் வறண்டு அரிப்பு ஏற்படும் போது இது மோசமாக ஆகலாம்‌.

உங்கள் பெற்றோர்களுக்கு இயற்கையிலேயே கண் வீக்கம் இருந்தால் அது அவர்கள் பிள்ளைகளுக்கும் ஜெனிடிக்காக ஏற்படலாம்.

அதிக நேரம் டிவி பார்ப்பது, கம்ப்யூட்டர் மற்றும் போன்களை பார்ப்பதும் காரணமாக இருக்கும். இதனால் கண் நரம்புகள் சோர்வை அடைந்து இந்த வீக்கம் ஏற்படுகிறது‌. ஆகவே இந்த பழக்கங்களை அளவோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்‌.

கண் வீக்கத்தை இயற்கையாக குறைப்பது எப்படி

ஐஸ் பையை கண்களின் மேல் வைப்பதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும்‌ இது உடனடி பலன்தரும்.

உபயோகித்த டீபைகளை குளிர வைத்து அதைக் கண்களின் மீது வைக்க பலன் கிடைக்கும். இது ஒரு தற்காலிக தீர்வுதான்.

அதிக அளவு தண்ணீர் குடிப்பதாலும் , நல்ல ஆரோக்கியமான தூக்கத்தாலும் இந்த பிரச்னையை நீக்கலாம்

தூங்கும் போது உயர்ந்த தலையணையை வைத்துப் படுக்கலாம்‌ .

அதிக உப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்

மருத்துவ வழிகள்

ரெடினால், பெப்டைட்ஸ் நிறைந்த கண் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

லேசர் ட்ரீட்மெண்ட் மூலமாக சரிசெய்யலாம்

பிரச்னை அதிகமாக இருந்தால் மருத்துவரின் பரிந்துரையில் ப்ளிஃபாரோ ப்ளாஸ்டி (blepharoplasty) சிகிச்சை முறையில் ஈடுபடலாம். இந்த முறையில் அதிக கொழுப்பு நீக்கப்படும்.

தினசரி பழக்கங்கள் மேற்கொள்ள

நல்ல தூக்கத்தைக் பெறுங்கள்

உப்பு குறைக்கவும்

கண்கள் எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். அதிகம் கசக்காதீர்கள்.

வெயிலில் செல்லும் போது கூலிங் கண்ணாடி அணியுங்கள்

அதிகம் டிவி பார்க்காதீர்கள்

கண் வீக்கத்தை கூடிய வரையில் இயற்கை முறைகளை மேற்கொண்டு நம் வாழ்க்கை முறையின் மாற்றத்தின் மூலம் இந்தப் பிரச்னையைத் தடுப்பது நல்லது.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online